1999இல் காலடி எடுத்து வைத்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 வருட விற்பனை பயணத்தை முடித்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் 3 மாதத்திற்கான சர்வீஸ் கார்னிவல் (Service Carnival) என்கிற சலுகைகள் அடங்கிய பரிசை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களால் சர்வீஸ் கார்னிவல் என்ற பெயர்ல் அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் இந்த வருட டிசம்பர் 31ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளன. இதன் சலுகைகள் மூலம் இந்தியாவில் விற்பனை விகிதத்தையும் அதிகரிக்க முடியும் என டொயொட்டா நிறுவனம் நம்புகிறது.
இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது டொயோட்டா மாடல்களில் உள்ள பழுதுகளை 20 சதவீதம் வரை தள்ளுபடியில் சரிசெய்துகொள்ள முடியும்.
இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் உரிமையாளர்கள் டொயோட்டா வி-கேர் சர்வீஸ் மையங்களில் சர்வீஸ் செய்வதன் மூலம் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். கட்டாய 14 பாயிண்ட் பாதுகாப்பிற்கான சரிபார்ப்பும் இதில் அடங்கும். இந்த பராமரிப்பு சர்வீஸில் டயர் மற்றும் பேட்டரி மாற்றுதலுக்கான பணியாளர் கட்டணமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
மிக விரைவான சர்வீஸ், அதே நேரத்தில் விலை குறைவான சர்வீஸ்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மீதும் தங்களது தயாரிப்புகள் மீதும் வைத்திருக்கும் தரத்திற்கான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என டொயொட்டா நிறுவனம் கருதுகிறது.
இந்த சலுகைகள் குறித்து டொயொட்டா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் என்.ராஜா கூறுகையில், ‘20 வருடங்களாகப் பயணித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் கருத்திற்கு மதிப்பளித்து எங்களது தயாரிப்புகளையும் விற்பனை மற்றும் சர்வீஸ்களையும் செய்து வந்தோம் என நம்புகிறோம்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த விழாகாலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள கார்னிவல் சலுகை. இந்த திட்டத்தில் எங்களது அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.
இதையும் படிக்க: வாடிக்கையாளர்களை ஈர்த்த மையிண்ட் ட்ரீ பங்குகள்!