அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் பாலம் அருகே திருமானூர் காவல் துறையினர் வாகனடத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்சல் சர்வீஸ் போல தார்ப்பாய் போட்டு அவ்வழியாக வந்த ஆறு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரிகளில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாகக் கீழே வடிந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரி ஓட்டுநர்களிடம் விசாரித்தனர். விசாரணையில், கல்லணை அருகே உள்ள மாதாபுரத்திலிருந்து சவுடு மணலை சட்ட விரோதமாக ஏற்றி சேலத்திற்குக் கொண்டுசென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஆறு லாரிகளையும் ஒரு ஜீப்பையும் பறிமுதல்செய்த காவல் துறையினர், ஏழு பேரை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: கரோனா: உயிரை பணயம் வைத்து மனிதம் காக்கும் எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்..!