ETV Bharat / science-and-technology

பர்க்மேனை விரட்ட வரும் அப்ரில்லா! - scooter

பியாஜியோ நிறுவனம் அப்ரில்லா 160சிசி கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை சுஸுகியின் பர்க்மேனுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்ரில்லா
author img

By

Published : Mar 19, 2019, 6:42 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சுஸுகி நிறுவனம் பர்க்மேன் எனப்படும் 125சிசி கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக பியாஜியோ நிறுவனம் 160சிசி கொண்ட பவர்ஃபுல் ஸ்கூட்டரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பானது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சுஸுகியின் பர்க்மேனுக்கு எதிராக இந்த அதிக சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்கள் வெகுவிரைவில் களமிறக்கப்பட உள்ளன.

அப்ரில்லா
அப்ரில்லா

மேக்ஸி ஸ்டைலில் விற்பனையாகி வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் வெளிநாடுகளில் 125சிசி முதல் 600சிசி வரையிலான எஞ்ஜின் சக்தியுடன் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் 125சிசி-இல் மட்டுமே விற்பனையாகி வருகிறது. சுஸுகியின் அக்செஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் தான் இந்த ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டரின் பிரத்யேகமான வடிவமானது ஸ்டைல் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அகலமான முன்புறம் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுள்ளது. இதே ஸ்டைலை தான் அப்ரில்லா நிறுவனமும் தனது மேக்ஸி ரக ஸ்கூட்டரில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த வடிவம் வாகனத்தை வேகமாக இயக்க ஏதுவாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர்கள் மூலம் பைக்குகளைப் போன்று தொலைதூர பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.

அப்ரில்லா
அப்ரில்லா

அப்ரில்லாவின் 160சிசி மேக்ஸி ஸ்கூட்டரானது, முழுக்க முழுக்க இத்தாலி டிசைனில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, உள் கட்டுமானங்கள் இந்திய பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்ட உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக இதன் ஸ்டைல், வாகனத்தின் சேஸிஸ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை இத்தாலியின் தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட உள்ளது.

இத்தாலியில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டாலும், 90 சதவீதம் இந்திய வாகன ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்பவாறு இந்த ஸ்கூட்டரை வடிவமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்த ஸ்கூட்டரில் எம்பி3 பிளேயர் உள்ளிட்ட சில சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரின் எஞ்ஜினானது, அப்ரில்லாவின் எஸ்ஆர்15 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட அதே கியர் பாக்ஸ் கொண்ட 155சிசி சிங்கிள் - சிலிண்டர் எஞ்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. மேலும், இதனை பாரத்-VI தரத்திற்கு ஏற்ப ட்யூன்-அப் செய்யப்பட்டு அதில் பொருத்தப்பட உள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.