டெல்லி: ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் ரூ.82,564க்கு (விற்பனையக விலை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்கூட்டர் கவர்ச்சிகரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் ஓட்டுபவர்களை கவர்ந்துள்ளது. இச்சூழலில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில், சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் நைட்ஸ்டார் கறுப்பு, ஸ்போர்ட்ஸ் சிவப்பு என இரண்டு புதிய வண்ணங்களில் புதிய கிராஃபிக்ஸ் அமைப்புடன் கிடைக்கிறது. இதுதவிர்த்து, வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும், ஸ்போர்ட்ஸ் எடிசன் என்பதை குறிக்கும் வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
திறமை இருக்க பயம் எதற்கு?- பள்ளிப் படிப்பை முடிக்காத சிறுவன் பைக் உருவாக்கி சாதனை
இந்த ஸ்கூட்டரில் 124சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.14 பிஎச்பி திறனையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி, ஆல்டர்னேட் கர்ரண்ட் ஜெனரேட்டர் ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இதன் எஞ்சின் மிகச்சிறப்பான செயல்திறன், எரிபொருள் சிக்கனம், சத்தமில்லாத எஞ்சின் ஸ்டார்ட் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் மல்டி ஃபங்ஷன் இக்னிஷன் சுவிட்ச், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலாய் வீல்கள், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன.
ஸ்டைலிஷ் லுக்... பஜாஜ் ஆட்டோ பல்சர் என்எஸ், ஆர்எஸ் அறிமுகம்!
புதிய ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் ரூ.82,564 (விற்பனையக விலை) விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது சுஸுகி பர்க்மேன் 125, டிவிஎஸ் டிவிஎஸ் என்டார்க் 125 உள்ளிட்ட மாடல் ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக இருக்கும்.