டெல்லி: மைக்ரோசாஃப்ட் 365க்கான இரட்டை விசை குறியாக்கம் உங்கள் தரவைப் பாதுகாக்க இரண்டு விசைகளைப் பயன்படுத்துகிறது. பயனர்கள் கட்டுப்பாட்டில் ஒரு விசையும், இரண்டாவது மைக்ரோசாஃப்ட் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
இது குறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் அலுவலர், “பயனாளர்கள் தங்களில் தகவல்களை பத்திரமாக பாதுகாக்க இந்த அம்சம் உதவும். இதன் ஒரு குறியாக்கம் மட்டும் தான் மைக்ரோசாஃப்ட் வைத்திருக்கும். அதாவது பயனர்களின் தகவல்களை நிறுவனம் நினைத்தால் கூட அணுக முடியாது. அதன் இரண்டாவது குறியாக்கத்தை உள்ளீடு செய்தால் மட்டுமே தகவல்களை காண இயலும்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!
பல நாடுகளைச் சேர்ந்த மற்றும் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் வேலை செய்கிற பயனர்கள் தங்களுடைய தாய் மொழியில் எளிதாக உள்ளடக்கங்களை உருவாக்கிப் பயன்படுத்த ஆஃபிஸ் சூட் உதவுகிறது. ஆஃபிஸ் செயலிகள் அனைத்து இந்திய மொழிகளிலும் செயல்படுகிறது. மேலும் விண்டோஸ் 7 மற்றும் அதற்குப் பிந்தைய வெளியீடுகளில் இயங்கும். நுகர்வோருக்கும், வர்த்தகரீதியாகவும் தங்குதடையற்ற தகவல் தொடர்பில் உதவுவதற்கு விண்டோஸ், ஆன்ட்ராய்டு மற்றும் iOS என அனைத்திலும் ஆஃபிஸ் செயலிகள் கிடைக்கின்றன.