எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, கரோனா காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
யூ-டியூப்புக்கு சவால்விடும் வகையில் புதிய அம்சத்தை கொண்டு வந்த பேஸ்புக்!
ஃபேஸ்புக் உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இதன் மூலம், குறுகிய காலத்தில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ஜியோ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜியோ 5ஜி சேவை வெகு விரைவில் தொடங்கும் என்று கூறிய முகேஷ் அம்பானி, உலகத்தரத்தில் இந்த சேவை இருக்கும் என்றார். மேலும், மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு 5 ஜி சேவைக்கு ஜியோ இயங்குதளங்கள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணமழையைப் பொழியும் ஜியோ பங்குகள்... 13ஆவது நிறுவனமாக வந்த கூகுள்!
ஜியோ மீட்
காணொலி காட்சி வாயிலாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கும், பாடம் நடத்துவதற்கும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த செயலி வெளிவருகிறது.
ஜியோ மார்ட்
வாட்ஸ்அப் உடன் இணைந்து சிறு வணிகர்கள் உதவியுடன் இது செயல்படவுள்ளது. இதன்மூலம் சிறு வணிகர்கள் பெரிதும் பயனடைவர்.
ஜியோ டிவி+
ஜியோ டிவி பிளஸ்-ஐ பொறுத்தவரை, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து OTT தளங்களையும் ஒருங்கிணைக்கிறது. தனித்தனி லாக் இன் இல்லாமல், ஒரே லாக் இன் கீழ் அனைத்து தளங்களையும் பார்க்க முடியும். மேலும், குரல் தேடுதல் மூலமும் தேவையான படங்களை தேடி எடுக்க முடியும். இவற்றுடன் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் கண்டுகளிக்க முடியும்.
திறன்வாய்ந்த கைப்பேசிகள்
கூகுள் - ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 2ஜி சேவையை முற்றிலும் நீக்கி, புதிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. கூகுள் மற்றும் ஜியோ இணைந்து புதிய வலிமை மிக்க ஆண்ட்ராய்டு தளத்தை அடிப்படையாகக் கொண்டு திறன் வாய்ந்த இயங்குதளத்தை தயாரிக்க உள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.
ஜியோ க்ளாஸ்
ஜியோ கிளாஸ்-ஐ பொறுத்தவரை மெய் நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 75 கிராம் எடையிலான இந்த கண்ணாடி வழியே, மற்றவர்களிடம் உரையாடலாம்.
3டி மெய்நிகர் வகுப்பறைகள் மூலம் ஹோலோகிராபிக் வழியே பாடங்களை எடுக்கலாம். மேலும், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பல இடங்களை சுற்றிப்பார்க்க இயலும்.