ETV Bharat / premium

Live Update: குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்! - himachal election

Gujarat
Gujarat
author img

By

Published : Dec 8, 2022, 9:12 AM IST

Updated : Dec 8, 2022, 1:17 PM IST

08:58 December 08

குஜராத்தில் சுயேட்சைகள் ஆதிக்கம்

13:10, Dec 08, ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ள 5 தொகுதிகள் நிலவரம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜாம்ஜோத்பூர்(JAMJODHPUR), போட்டட்(BOTAD),காரியாதர்(GARIYADHAR), விசாவதர்(VISAVADAR), தெடியபட(DEDIYAPADA) ஆகிய 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

13:00, Dec 08, குஜராத்தில் சுயேட்சைகள் ஆதிக்கம்

தானேரா மற்றும் வகோடியா சட்டமன்ற தொகுதிகளில் பலம் வாய்ந்த பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

12:30, Dec 08 - குட்டியானா(KUTIYANA) தொகுதியில் சமாஜ்வாதி முன்னிலை

குஜராத் மாநிலம் குட்டியானா தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் காந்தல் ஜடேஜா முன்னிலை வகிக்கிறார்.

12:24, Dec 08 - சுந்தர்நகர் தொகுதியில் பாஜக வெற்றி!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுந்தர்நகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் வெற்றி பெற்றார்

12:19, Dec 08 - குஜராத் பாஜகவினர் கொண்டாட்டம்

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் மேளதாளத்துடன் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

12:13, Dec 08 - சாதனை படைத்த பாஜக

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்யவுள்ளது பாரதிய ஜனதா கட்சி

12:10, Dec 08 - இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவு (himachal election result)

இமாச்சல் பிரதேசத்தில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் - 34, பாஜக- 20, மற்றவை - 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

12:05, Dec 08 - காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றம்!

குஜராத் வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாஜக - 141, காங்கிரஸ் - 17, ஆம் ஆத்மி - 05, மற்றவை - 03 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

11:55, Dec 08 - மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை!

அண்மையில் 140 பேர் உயிரிழந்த தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

11:52, Dec 08 - அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ்(dimple yadav) முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங்கை விட அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 16,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

11:41, Dec 08 - ஜிக்னேஷ் மேவாணி பின்னடைவு!

குஜராத் வட்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவாணி பின்னடைவு

11:20, Dec 08 - ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் முன்னிலை

குஜராத் மாநிலம் கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி 18,998 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

11:15, Dec 08 - இமாச்சலில் முதல் வெற்றி!

இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் முடிவு அறிவித்தது. பாஜக முதல் வெற்றி பெற்றது.

11:09, Dec 08 - பாஜக சாதனை..!

குஜராத்தில் 1985 சட்டப்பேரவை தேர்தலில், 182 தொகுதிகளில் 149 தொகுதிகளை வென்று காங்கிரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்து 151 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

11:04, Dec 08 - ஜடேஜா மனைவி முன்னிலை!

குஜராத் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா(rivaba jadeja) முன்னிலையில் உள்ளார்.

10:49, Dec 08 - ஹர்திக் பட்டேல் முன்னிலை..

குஜராத் விரம்கம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்திக் பட்டேல் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

10:25, Dec 08 - கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

குஜராத்தில் தொடர்ந்து பாஜக 151 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

10:16, Dec 08 - இமாச்சலில் கடும் போட்டி!

இமாச்சல் பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

09:33, Dec 08 - எட்ட முடியாத இடத்தில் பாஜக!

குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் திகழ்கிறது. பாஜக 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

09:20, Dec 08 - இமாச்சலில் இழுபறி!

68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது. பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

08:58, Dec 08 - குஜராத்தில் பாஜக முன்னிலை

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 120 இடங்களில் முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Last Updated : Dec 8, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.