தன்னை தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு, தனக்கென தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாசா நாடு என அறிவித்தவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இணையம் மூலம் அவ்வப்போது வெளியுலகத்திற்கு காட்சித் தந்து சொற்பொழிவாற்றி வருகிறார். கைலாசாவில் உல்லாசமாக இருப்பதை பார்த்து கைலாசா பாஸ்போர்ட் எடுத்து கொண்டு நித்யானந்தாவிடம் சேர்ந்து விட வேண்டும் என இளைஞர்கள் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இப்படி இருக்க தற்போது கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற விளம்பர போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த சம்பாவனையுடன் (ஊதியத்துடன்) கூடிய வேலைவாய்ப்பு என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாசாக்களில் பின்வரும் துறைகளில் வேலைவாய்ப்பு எனவும்,
நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம் கைலாஸாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள்
கைலாஸா IT wing, அயல்நாட்டு தூதரகம், பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்வதற்காக இரண்டு செல்போன் எண்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. இதனை நம்பி பலரும் தொடர்பு கொண்டு விண்ணபிக்கின்றனர். இதனை சோதனை செய்வதற்காக தொடர்பு கொண்டு பேசிய போது எல்லாதுறையிலும் வேலை இருப்பதாகவும், குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர். மேலும் கைலாசாவில் உள்ள பல்வேறு கிளைகளில்
உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
![chennai police began enquiry on the nithyananda kailasa job vacancy poster](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-kailasa-script-7202290_14112022153905_1411f_1668420545_231.jpg)