ETV Bharat / opinion

சோளம் – விவாசாயிகளின் சோகம்: குழி தோண்டும் உலக வர்த்தக அமைப்பு - சோள இறக்குமதியும் இந்திய விவசாயிகளும்

வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் மெட்ரிக் டன் சோளம் மற்றும் 10 லட்சம் மெட்ரிக் டன் பால் பொருள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நமது நாட்டு விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய தேசிய விதைக் கழகத்தின் இயக்குநர் இந்திர சேகர் சிங் ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்..!

WTO and death of Maize prices
WTO and death of Maize prices
author img

By

Published : Aug 7, 2020, 6:00 PM IST

மக்காச் சோள இறக்குமதி:

இந்திய விவசாயிகளுக்கு பேரிடியாக அமையும் விதத்தில், இந்திய அரசு 5 லட்சம் மெட்ரிக் டன் சோளம் மற்றும் 10 லட்சம் மெட்ரிக் டன் பால் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதற்கு உலக வர்த்தக அமைப்பில், இந்தியா ஒப்புக்கொண்டபடி சுங்க வரிச் சலுகை திட்டத்தின் கீழ், 15 விழுக்காடு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டு விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கு சற்று விரிவாகப் பார்க்கலம்.

காட் ஒப்பந்தம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு:

உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றான இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது. பன்னாட்டு நிறுவனமான உலக வர்த்தக அமைப்பு, முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையான தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

இந்த நோக்கத்தை செயல்படுத்த வேண்டி, சுங்க வரி, இறகுமதிக் கட்டணம், மானியங்கள் உள்ளிட்ட வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்துகிறது. ஆனால், வளரும் நாடுகளும், புவிக்கோளத்தின் தென்பகுதியில் உள்ள அரசுகளும் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு சலுகைகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

காரணம், வளர்ச்சி அடைந்த மேலை நாட்டு சாகுபடியாளருக்கும், வளரும் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கும் இடையே வசதி வாய்ப்பில் உள்ள வேறுபாடானது மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாகும்.

தொடக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து, மூன்றாம் உலக நாடுகளின் விவசாயிகளுக்கு சலுகைகளைப் பெறுவதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டது. இதற்கும், அமெரிக்கா தலைமையிலான வளர்ந்த நாடுகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்தன. இப்போது வரையிலும், அமெரிக்க சாகுபடியாளர்கள் தான் உலகிலேயே உச்சபட்சமான மானியத்தையும் சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.

இருந்த போதிலும், வளரும் நாடுகளின் விவசாய விளை பொருட்களில் சிலவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நடைமுறையில் உள்ள சலுகைகளை நீக்க அமெரிக்கா வலியுறுத்திவருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் கொண்டு வந்ததே சுங்க வரி சலுகை ஒதுக்கீட்டு திட்டம். இதன் வழியாக, வளரும் நாடுகள் விவசாய விளை பொருள்களுக்கான இறக்குமதி கட்டணத்தைக் குறைத்து, தங்கள் சந்தையை அன்னிய நாடுகளுக்கு திறந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

காட் ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து, அதன் 28ஆவது உறுப்பின்படி நமது நாட்டு சந்தையில் பிற நாடுகள் நுழைய இசைவளித்து, இந்தியா புதிய இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சோளத்திற்கு 50 விழுக்காடும், பிற பருப்பு வகைகளுக்கு 40 முதல் 60 விழுக்காடும் இறக்குமதி வரியும் நடைமுறையில் உள்ளது. இது, பிற நாடுகள் தங்களது விளை பொருள்களுக்கான திறந்தவெளிக் கிடங்காக இந்தியாவை மாற்றுவதற்கு எதிரான நடவடிகையே ஆகும்.

சோள இறக்குமதியும் இந்திய விவசாயிகளும்:

சோள இறக்குமதி பற்றி ஆழமாகப் பேசவேண்டிய சூழல் எழுந்துள்ளது. ஏனென்றால், சோள விவசாயிகளுக்கு மிகுந்த சோதனையாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. இதைவிட மோசமான ஒரு சூழலில், இந்த இறக்குமதி நடைபெற்றிருக்க முடியாது.

ரபி பருவத்தில் அறுவடையான சோளத்திற்கு சரியாயன விலை இல்லை. எந்த அளவு விலை வீழ்ச்சி என்றால், ஏக்கருக்கு ரூ 20,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிகார் விவசாயிகள் தலைமேல் கையை வைத்துள்ளனர். அதிகப்படியான விளைச்சலும், சேமிப்புக் கிடங்குகள் போதிய அளவு இல்லாமையும் சோளத்திற்கான விலை அதள பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதற்கு பிற முக்கிய காரணங்களாகும்.

சோள விவசாயிகளுக்கு மற்றுமொரு சோதனையாக வந்திருப்பது, ராணுவப் புழு என்ற புதிய பயிர்க்கொல்லி. பிகார், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த புதிய வகைப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வீரிய்ம மிக்க பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியும், இதனைக் கட்டுப்படுத்த இயலாததால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கின்றனர்.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் மக்காச் சோளத்தின் விலை முன்னெப்பொதும் இல்லாத அளவு சரிந்துள்ளது, விவசாயிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உள்நாட்டில், மக்காச் சோளத்தின் பயன்பாடு என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கோழித் தீவன தயாரிப்பில் 60 விழுக்காடு சோளம்தான். பன்னைப் பறவைகள் தீவனம் தவிர்த்து, ஸ்டார்ச் தயாரிப்பிலும் முக்கிய இடுபொருளாக சோளம் உள்ளது. கரோனா தாக்கத்திற்குப் பின்னர், கோழிப் பன்னைகளும் பெருமளவில் முடங்கிப் போயுள்ளதால், கூடிய விரைவில் சோளத்திற்கான தேவை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மரபனு மாற்றச் சோளம் தரும் ஆபத்து:

நாம் எதிர்கொள்ளும் அடுத்த பெரும் சவால், மரபனு மாற்றபட்ட சோளத்தை இறக்குமதி செய்வதில் இருந்துவருகிறது. உலகெங்கும் பல நாடுகளில் பயிரிடப்படும் மரபனு மாற்றப்பட்ட சோளத்தின் விலை, இந்தியாவில் விளைவிக்கப்படும் இயற்கயான சோளத்தின் விலையைவிட குறைவு.

இந்த நிலையில், இறக்குமதியாகும் 5 லட்சம் மெட்ரிக் டன் சோளம் முழுமையும் மரபனு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை சோதனைக்கு உட்படுத்துவது மற்றுமொரு மிகப் பெரும் சவால்.

இருப்பினும், இது நடந்தேறினால், சோளம் விலை மேலும் சரியும். காரணம், பிரேசில் முதல் அமெரிக்கா வரை மரபனு மாற்றப்பட்ட சோளத்தைப் பயிரிடும் விவசாயிகள் பெருமளவில் சலுகைகள் பெருகிறார்கள். அந்நாட்டு அரசுகளும், சலுகைகள் வழங்குவதன் வாயிலாக, விவசாயிகளின் செலவினங்கள் குறைவதாக ஒரு தோற்றத்தைத் தருகின்றன.

இந்தியா அயல்நாட்டு விளைபொருள்களின் இலவச கிடங்கா?

கடுமையான சட்டங்களும் விதிமுறைகளும் இல்லாத நிலையில், மரபனு மாற்றப்பட்ட சோளம் கொட்டப்படும் கிடங்காக இந்தியா மாறும் அபாயம் உள்ளது என்பதே யதார்த்தம். சோளம் பயிரிடும் இந்திய விவசாயிகள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் தற்போதைய நிலையில், இந்த இறக்குமதிகள் வழியாக புதிய பயிர்க் கொல்லிகள் நாட்டினுள் நுழைவது ஆபத்தானது. உள்நாட்டு உற்பத்தி சீர்குலைந்து, நாம் அயல் நாட்டு சோளத்தை நம்பி இருக்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்.

தற்போதைய காரிஃப் பருவ பயிரிடும் வகைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், வட இந்தியா முழுமையும் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

காய்கறி மற்றும் பூக்களைப் பயிரிடும் விவசாயிகளும்கூட வசதி கருதி, இம்முறை சோளம் பயிரிட தலைப்பட்டுள்ளனர். சோளம் பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால், அறுவடைக் காலத்தில் கூடுதல் விளைச்சல் காரணமாக மீண்டும் விலை வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாது.

அக்டோபர் மாத இறுதியில், இறக்குமதி சோளத்தினை சேமித்து வைப்பதால் நமது கிடங்குகள் நிரம்பி வழிந்தால், உள்நாட்டு விவசாயிகள் எங்கு போவார்கள்? அவர்களின் நிலைமை கையறு நிலைதான்.

தற்போது, வியாபரிகள் சேமித்து வைப்பதற்கான அளவு நீக்கப்பட்டுள்ளது, எவ்வளவு வேண்டுமென்றாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். மேலும், விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதியாளருக்கே விற்பனை செய்யலாம் என்பதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

மரபனு மாற்றப்பட்ட சோளத்தைவிட விலை கூடுதலாக இந்திய சோளம் இருப்பதால், இவை யாவும், விவசாயிகளுக்கு பெரும் பாதகமாகவே அமையும். இத்தகைய காரணங்களால், சோளத்திற்கான இந்திய சந்தையானது, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு யூக வணிக விளையாட்டில் பகடைக்காயாகும் மோசமான சூழல் உருவாவது தவிக்க இயலாமல் போகும். இதனால், நமது சோள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெறுவதைக்கூட உறுதிசெய்வது அரசுக்கு பெரும் சவாலாக மாறும்.

விவசாயிகளின் எதிர்காலம்

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம் இந்திய சோள விவசாயிகளின் எதிர்காலம் இருள்கவிந்த ஒன்றாகவே தெரிகிறது. பெருமளவு சலுகைகளை அளித்து விலையை செயற்கையாக குறைத்து சந்தைக்கு வரும் மேலை நாட்டுச் சோளத்துக்கு ஈடுகொடுக்க முடியாது.

இந்நிலையில், வரும் ஆண்டுகளில் அதிகப்படியான சோளத்தை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவு பிரச்னையை தீவிரப்படுத்தி விவசாயிகளுக்குப் பெரும் சோதனையாகவே அமையும்.

இதையும் படிங்க: 'பிளாஸ்மா சிகிச்சையால் எவ்வித பலனும் இல்லை' - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.