ETV Bharat / opinion

மேற்கு வங்க தேர்தல் களத்தில் இஸ்லாமியர்களின் தாக்கம்! - மேற்குவங்கம் இஸ்லாமியர்களின் தாக்கம்

2016ஆம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராக மத்தியில் இருந்தபோது ஆளும் கூட்டணியில் இருந்த மம்தா தனித்து போட்டியிட்டு இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் எதிராக மீண்டும் வெற்றி பெற்றார். சுவாரஸ்யமாக, பாஜகவுக்கு அப்போது சுமார் 10% வாக்குகளை பெற்றது. 2019 பொதுத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் 40% வாக்குகளைப் பெற்று பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

ஓவைசி
ஓவைசி
author img

By

Published : Feb 4, 2021, 3:48 PM IST

காற்றாடி உயரமாக பறந்து தரையில் உள்ள புல் மற்றும் மொட்டுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி இறுதியில் தாமரை மலர உதவப போகிறது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) ஏற்கனவே மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 10 இடங்களில் (காற்றாடி சின்னத்தில்) போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், வாக்குகளை பிரித்து முஸ்லிம் சிறுபான்மையினரை மாநிலத்தில் வாக்கு வங்கிகளாக ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மற்றொரு முஸ்லீம் மதகுரு அப்பாஸ் சித்திகி, தனது இந்திய மதச்சார்பற்ற முன்னணியை களமிறக்கி அந்த தீயை ஊதி பெரிதாக்கியுள்ளார். AIMIM உடன் சேர்ந்து அவர் பலருக்கு, பெரும்பாலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்த முடியும்.

சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மதிப்பிடுவது மேற்குவங்க அரசியலின் நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது, மேலும் தேர்தல் காலங்களில் அது கட்டுப்படுத்தப்படாது. இது ஒரு குறிப்பிட்ட வழியில் காட்டிக்கொண்டு தொழுகை நடத்தும் மம்தா பானர்ஜியின் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களுடன் திரும்பி வருகிறது. இந்த சுவரொட்டிகளும் துண்டுபிரசுரங்களும் ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தின் ஆண்டு விழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகின்றன. இமாம்கள் மற்றும் மியூசின்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்க திரிணாமுல் காங்கிரஸ்-அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பு அதில் ஒன்று.

34 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் ஆட்சி செய்த இடது முன்னணியும் இந்த சமரச அரசியலில் இல்லாமல் இல்லை. உண்மையில், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் முஸ்லீம் சிறுபான்மையினரிடமிருந்து அதிக வாக்குகள் பெறுவதற்கான வெவ்வேறு உத்திகளைக் கையாண்டது, அது மதரஸா வாரியத்தை நிறுவனமயமாக்கவோ அல்லது சிறுபான்மை முஸ்லீம் படிப்புகளுக்கு மட்டுமே உள்ள ஒரு பல்கலைக்கழகமாகவோ இருக்கலாம். சிபிஐஎம் தனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் அரசாங்க வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது, ஆனால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியவில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தேர்தல்களில் முஸ்லீம் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், எந்தக் கட்சியும் அவர்களைப் புறக்கணிக்க முடியவில்லை.

ஆனால், 2019 பொதுத் தேர்தலில் பாஜக வேறு திட்டத்தை கையாண்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நடந்ததைப் போல மேற்குவங்கத் தேர்தலில் வாக்காளர்களின் பிளவு ஒருபோதும் நடக்கவில்லை. 2001 மற்றும் 2006 தேர்தல்களின் போது, ​​பாஜக வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தது. 1998, 1999 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி கட்சியாக பங்கு வகித்திருந்தாலும், மாநிலத் தேர்தல்கள் என்று வரும்போது மம்தா காங்கிரஸை விரும்பினார். 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கூட, மம்தா இறுதியாக இடது முன்னணியைத் தோற்கடித்தபோது, ​​அவர் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தார், பாஜகவுடன் அல்ல. அந்தத் தேர்தலில் பாஜக வெறும் 4.1% வாக்குகளைப் பெற்றது.

2016ஆம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராக மத்தியில் இருந்தபோது ஆளும் கூட்டணியில் இருந்த மம்தா தனித்து போட்டியிட்டு இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் எதிராக மீண்டும் வெற்றி பெற்றார். சுவாரஸ்யமாக, பாஜகவுக்கு அப்போது சுமார் 10% வாக்குகளை பெற்றது. 2019 பொதுத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் 40% வாக்குகளைப் பெற்று பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இது மக்கள் வாக்குதானா? இடது முன்னணியின் வாக்குப் பங்கு 27%லிருந்து 7.5% வரை சரிந்ததா அல்லது காங்கிரஸின் வாக்கு 7% சரிந்ததா, திரிணாமுல் வாக்குகள் 2% சரிந்ததா?

இந்து மற்றும் இந்து-புலம்பெயர்ந்த வாக்காளர்களை மையமாகக் கொண்டு பாஜக வெற்றிகரமாக சாதித்தது. இந்த பிளவு முடிந்தவுடன், அடுத்த விஷயம் பாஜகவுக்கு ஆதரவாக நடந்தது, 2016 மற்றும் 2019க்கு இடையில் இடது முன்னணி வாக்காளர்களை காவி கட்சிக்கு மாற்றியது. ஒரு தோராயமான மதிப்பீட்டின் படி ஒரு கோடி இடது வாக்காளர்கள் பாஜக நோக்கி நகர்ந்தனர்.

இதன் விளைவாக, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களைப் பிடித்தது. பிளவுபடுத்தல் என்பதற்கு இணையாக மேற்கு வங்கத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டர்கள் என்ற கட்டுக்கதை இருக்கிறது. 2019ல் பாஜக பிரபலமான முஸ்லீம் வாக்குகளைப் பெற்றதா? என்பது நிச்சயமாக விவாதத்திற்குரியது, அல்லது அது இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பெற்றதா? எவ்வாறாக இருந்தாலும், எண்ணிக்கை அதிகம் பிரதிபலிக்கின்றன.

தெற்கு மால்டா மக்களவைத் தொகுதியில் 64% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 2019 தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் வேட்பாளர் 4,44,270 வாக்குகளையும் (34.73%), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 3,51,353 வாக்குகளையும் (27.47%) பெற்றுள்ளதைக் காட்டுகிறது. பாஜக பெற்றது, 4,36,048 வாக்குகள் (34.09%).

ஜங்கிபூர் மக்களவைத் தொகுதியில், முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 82% உள்ளனர். இங்கு பாஜக வேட்பாளர் 24.3% வாக்குகளைப் பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 43.15%, காங்கிரஸ் வேட்பாளர் 19.61% பெற்றனர்.

இந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை கொண்டு மற்ற தொகுதிகளை பற்றி பேச போதுமானது. உண்மையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பின்னர் மதிப்பீடுகளின்படி, மேற்கு வங்கத்தில் 30% முஸ்லீம் மக்கள் தொகை, சுமார் 102 சட்டமன்றத் தொகுதிகளின் விளைவுகளை பாதிக்கும் திறன் கொண்டது. தோராயமாக, இது சட்டமன்றத்தின் மொத்த பலத்தில் கிட்டத்தட்ட 35% ஆகும்.

2019 தேர்தலில் வெற்றியை ருசித்த பிறகு, பாஜக தன்னை இந்து வாக்குகளோடு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் இல்லை. ஒரு 'மதச்சார்பற்ற' மம்தா பானர்ஜிக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் வாக்குகளின் பங்கு கட்சிக்கு வரவேற்பு அளிக்கும்.

பிரபலத்தின் அடிப்படையில் மிகவும் செல்வாக்குமிக்க ஃபர்ஃபுரா ஷரீஃப்பின் அனைத்து பிர்சாதாக்களுக்கும் பின்னால் AIMIM மற்றும் அப்பாஸ் சித்யுகி ஆகியோர் போட்டியிடத் தயாராக உள்ள நிலையில், மேற்கு வங்கத்தின் முஸ்லீம் மக்கள் இப்போது அவர்களின் 'வாக்கு வங்கி' என்ற முத்திரையைக் குறைக்க தயாராக உள்ளனர். அரசியல் கட்சிகள் அவர்களை வாக்கு வங்கிகளாக கருதாமல் வாக்காளர்களாகக் கருதுவதற்குத் தயாரா? 2021 வங்கத்தின் தேர்தல் கணக்கு நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.