ETV Bharat / opinion

பத்து ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத 888 சாலைத் திட்டங்கள்! - தேசிய நெடுஞ்சாலை

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, மத்திய அமைச்சகத்தின் கீழ் 888 சாலைத் திட்டங்கள் 2020-21ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளன.

சாலை
சாலை
author img

By

Published : Mar 24, 2021, 8:02 AM IST

Updated : Mar 24, 2021, 8:16 AM IST

மத்திய சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நம் நாட்டில் 62,15,797 கி.மீ நீளமுள்ள சாலைகள் உள்ளன. இதில் 1,36,000 கி.மீ சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள். ஆனால் இவை அனைத்தும் உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரத்தின் அளவோடு ஒத்துப்போகவில்லை என்பது தான் சுவாரஸ்யம்.

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் சாலை இணைப்பு வசதிகள் இன்னும் முழுமையடைவில்லை. நாட்டில் பல திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை முடிப்பதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். இதன் விளைவாக, திட்டச் செலவு அதிகரித்துள்ளது. கட்டுமானத் திட்டங்களின் தாமதத்தால் இவற்றைச் சமாளிக்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, மத்திய அமைச்சகத்தின் கீழ் 888 சாலைத் திட்டங்கள் 2020-21ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளன. 3,15,373.3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டங்களில், 27,665.3 கி.மீ நீளமுள்ள சாலைகள் கட்டப்பட உள்ளன.

இந்த 888 சாலைத் திட்டங்கள் டாமன் மற்றும் டையு தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தாமதமாக நடைமுறைபடுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் தாமதம் காரணமாக, மக்களின் நேரமும் பணமும் வீணடிக்கப்படுகின்றன. இது தவிர, ஒவ்வொரு நாளிலும் திட்டத்தின் செலவும் அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில், தாமதமாக இயங்கும் 888 சாலைத் திட்டங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நாட்டில் புதிய சாலை திட்டங்களை அறிவிப்பதை விட தாமதமான திட்டங்களை முடிப்பதில், சம்பந்தப்பட்ட அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.

தற்போதைய மத்திய அரசு நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத்தை முன்னுரிமையின் அடிப்படையில் எடுத்து வருகிறது. ஆனால் தாமதமான திட்டங்களின் எண்ணிக்கை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எதிர்காலத்தில் தாமதமாக இயங்கும் இந்தத் திட்டங்களின் திட்ட செலவு அதிகரிப்பைக் குறைக்க, அவற்றை விரைவாக முடிக்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு கூடுதல் நிதி திரட்டவும் நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. NHAIஇன் செலவு அதிகரித்து வருகின்ற போதிலும், 2020-21 நிதியாண்டில் ஒப்பிடும்போது தனியார் துறையின் முதலீடு குறைந்துள்ளது என்று நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியார் துறை பங்கேற்பதை ஊக்குவிக்க சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சில திட்டங்கள் நாட்டில் உள்ளன.

ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தாமதமாக இயங்கும் திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது. இத்தகைய திட்டங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. இந்தத் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டன, ஆனால் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இல்லை.

நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் சுமார் 70 திட்டங்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அசாமின் நல்பாரி - பிஜ்னி திட்டம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வருகிறது.

அதாவது இந்தத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது இன்னும் நிலுவையில் உள்ளது. 27.3 கி.மீ நீளமுள்ள இந்தத் திட்டத்தின் திட்ட மதிப்பு 208 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 230 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

நாக்பூரிலிருந்து மகாராஷ்டிராவின் கோந்தாலி வரையிலான 40 கி.மீ சாலையும், 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதன் பணிகள் இப்போது வரை முடிக்கப்படவில்லை. திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் கரூர் வரை 80 கி.மீ நீளமுள்ள சாலையும் 10 ஆண்டுகள் தாமதமாக இயங்குகிறது. இதன் திட்ட மதிப்பு 51 கோடி ரூபாய்.

டெல்லி எல்லையிலிருந்து ஹரியானாவின் ரோஹ்தக் செல்லும் சாலையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட வேண்டியது. புள்ளிவிவரங்களின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்சம் 17 சாலைத் திட்டங்கள் தாமதமாக இயங்குகின்றன. இந்த 17 திட்டங்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை தாமதமாக நடைபெற்று வருகின்றன.

Last Updated : Mar 24, 2021, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.