ETV Bharat / opinion

மாதவிடாய் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அகற்றுவது எப்படி?

உலகளவில் மாதவிடாய் சுகாதாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகுவதில் கவனம் அதிகரித்து வந்தாலும், மாதவிடாய் பொருள்களை அகற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை பராமரித்தல் என்பது பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் திடக்கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 63 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் 35.3 கோடி பெண்கள் 44,125 மில்லியன் கிலோ மாதவிடாய் கழிவுகளை உருவாக்குகின்றனர்.

மாதவிடாய்
மாதவிடாய்
author img

By

Published : Nov 21, 2020, 2:32 PM IST

கோவிட்-19 ஊரடங்கின் தாக்கம் பெண்களை அளவுக்கு அதிகமாக பாதித்துள்ளது. மாதவிடாய் தொடர்பான நடைமுறையில் உள்ள சவால்களை கோவிட் தொற்றுநோய் அதிகப்படுத்தியது. நாடு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு மார்ச் 30ஆம் தேதி வரை பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் இடம் பெறாததால், அவற்றை வாங்குவதில் பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆனால் பயன்படுத்திய நாப்கின்களை பாதுகாப்பாக அகற்றுவது என்பது தொற்றுநோய்க்கு முந்திய காலத்திலும் சமீப காலங்களிலும் உள்ள மற்றொரு பிரச்னையாக உள்ளது.

மாதவிடாய் பற்றிய விஷயங்களையும் அது குறித்த சுகாதாரத்தை ஊக்குவிப்பதில் முன்னேற்றத்தை காண்பதிலும், சுகாதாரமான பொருள்கள் எளிதில் கிடைப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ள போதிலும், பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பொருள்களை எவ்வாறு கையாள்வது என்பது சிந்திக்கப்படாத அம்சமாகவே இருக்கிறது.

தானே குடிசைப்பகுதிகளில் மியூஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வு, 71% பெண்கள் அப்புறப்படுத்த கூடிய சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகவும், குறைந்தது 45% பேர் தங்கள் சானிட்டரி நாப்கின்களை, குப்பைத்தொட்டி இல்லாத காரணத்தால் பொது கழிப்பறைகளில் போட்டு விடுவதாகவும் தெரிவிக்கிறது.

தொற்றுநோய்களின் போது, மாதவிடாய் சுகாதார பொருள்கள் வாங்குவதற்கான துயரத்தையும் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் மற்றும் துணி பட்டைகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு துயரத்தையும் சேர்த்ததால், முடிவுகள் அச்சமூட்டுபவையாக இருக்கிறது. இது பெண்களின் நிலைமை எவ்வளவு கடுமையானது என்பதை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், மோசமான கழிவு மேலாண்மை சுற்றுசூழலை மாசுபடுத்துவதற்கும் நோயை பரப்புவதற்கும் எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது.

உலகளவில் மாதவிடாய் சுகாதாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகுவதில் கவனம் அதிகரித்து வந்தாலும், மாதவிடாய் பொருள்களை அகற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை பராமரித்தல் என்பது பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் திடக்கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 63 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் 35.3 கோடி பெண்கள் 44,125 மில்லியன் கிலோ மாதவிடாய் கழிவுகளை உருவாக்குகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள், 2016 அனைத்து மாதவிடாய் கழிவுகளையும் பெரிய அளவிலான மருத்துவ கழிவு எரிப்புகளுக்கு மாற்றவும் சுத்திகரிக்கவும் பரிந்துரைக்கிறது. ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முதலில் குப்பைகளை பிரித்தல், சேகரித்தல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் நிலையான சங்கிலியை உருவாக்குவது முக்கியம்.

வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக பிரிக்க காகிதப் பையைப் பயன்படுத்துவதிலிருந்து இதை தொடங்கலாம், அவை கழிவுகளை எடுப்பவர்களின் வேலையை எளிதாக்குகின்றன. இதன் மூலம் ஆபத்தான புற்றுநோய்களை உருவாக்கும் இந்த குப்பைகள் குப்பைகிடங்குகளில் தேங்குவதிலிருந்தோ அல்லது எரிக்கப்படுவதிலிருந்தோ தடுக்கப்படுகிறது,

நிதி சேர்க்கை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மேம்பாடு (FINISH) சொசைட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து 243 மாதவிடாய் உள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்த மக்கள் தொகையில் 68% மக்காத பட்டைகளை பயன்படுத்துவதாகவும், 24 விழுக்காடு பேர் மக்கக்கூடிய சுகாதார நாப்கின்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினர்.

பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எளிதில் மக்காத தன்மை கொண்டதாக இருப்பதால் ஒரு சானிட்டரி பட்டை மக்குவதற்கு 500 முதல் 800 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அவை உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிடாய் தயாரிப்புகளை வீட்டு குப்பைகளுடனோ அல்லது குப்பைத் தொட்டிகளிலோ போட்டு விடுவதால், அவை இறுதியில் திடக்கழிவுகளின் ஒரு பகுதியாக மாறுகிறது. மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை அகற்றுவது பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை என்றால் பயன்படுத்துபவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று UNICEF ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றை அகற்ற மாற்று ஏற்பாடுகள் இல்லாததால், மாதவிடாய் பெண்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பொருட்களை கழிவறைகளில் அப்புறப்படுத்துகிறார்கள், இது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது குழாய்களில் அடைக்கக்கூடும்.

பாதுகாப்பான, சுற்றுச்சூழலை பாதிக்காத சுகாதார தயாரிப்புகளுக்கு மாறுவது என்பது மாற்றுவதற்கான செயல்பாடு மட்டுமல்ல, மாற்று வழிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அணுகலையும் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இந்த தீவிர சிக்கலை எதிர்கொள்வதற்கு புதுமையான மற்றும் சாத்தியமான தீர்வுகளை காண ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வது கட்டாயமாகும். அவை கழிப்பறைகளின் பயன்பாட்டைக் கண்காணித்தல், நடவடிக்கையில் மாற்றத்தை உருவாக்குதல், பாதுகாப்பான அகற்றலுக்கான தொழில்நுட்ப தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் மாதவிடாய் கழிவுகளை முன்கூட்டியே அகற்றுவது போன்றவையாக இருக்கலாம். மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தின் முக்கிய உடல்நலம் மற்றும் மேம்பாடுகளை கண்காணிக்க குறைந்த செலவில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள புதுமையான மொபைல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.

இந்தியாவில் 2000ஆம் ஆண்டிலிருந்து திடக்கழிவு மேலாண்மை (SWM) தொடர்பான சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், வளர்ந்து வரும் குப்பை அகற்றும் தொழில்நுட்பங்கள், உரம் தயாரித்தல், கழிவுகளை பிரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு செய்தல் போன்றவற்றிற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை வலுப்படுத்தும் வகையில் பொருத்தமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்று தொற்றுநோய் காலத்தில் மாசுபட்ட, அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு உலகம் முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நாட்டில் மாதவிடாய் கழிவு மேலாண்மைக்கு தற்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளுக்கான ஒரு சூழலை உருவாக்குவது அவசியம்.

பாலினம் மற்றும் உரிமைகள், இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் இயக்குநர் நிஷா ஜகதீஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.