ETV Bharat / opinion

குளர்காலத்திற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதா? பதிலளிக்கிறார் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா - லடாக்

படை வீரர்கள் தங்குவதற்கான உறைவிடங்களைக் கட்டுகின்ற பணியும் கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்படும், ஏனெனில் குளிர் காலத்தில் எவ்விதக் கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது. லடாக்கில் கூடுதல் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோடைப் பருவத்தில் இதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கும் என லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா தெரிவித்துள்ளார்.

லடாக்
லடாக்
author img

By

Published : Aug 28, 2020, 1:35 PM IST

கிழக்கு லடாக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை நூறு நாள்களைக் கடந்துள்ள நிலையில், முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் சீன ராணுவத்துக்கு மிகச் சொற்பமான ஆர்வம் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த உண்மை நிலவரம், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களையும் எதிர்கொள்வதற்கு நாட்டின் படை வீரர்கள் முன்னேற்பாடாக இருப்பதாகவும், கடுமையான குளிர் கால மாதங்கள் உள்பட நீண்ட காலப் போராட்டத்துக்கும் தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிடம் முப்படைகளின் தலைமை தளபதி தெரிவித்த தகவலில் பிரதிபலிக்கிறது.

குளிர் காலம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, வழக்கமாக நமது ஊர்கள் மற்றும் நகரங்களில் நமக்குக் கிடைக்கும் பிராண வாயுவின் அளவில் ஏறத்தாழ பாதி மட்டுமே கிடைக்கக் கூடிய, உயரமான மலைப் பகுதிகளில் உறை பனிச் சூழலில் நமது படை வீரர்கள் எப்படித் துயரப்படுவார்கள் என்பது குறித்த பார்வைக்கு வழிவகுத்துள்ளது. எல்லாமே உறைந்து விடும் என்பதால் அடிப்படைத் தேவையான தண்ணீர் கிடைப்பதே அங்கு கடினமாக இருக்கும். லடாக்குக்குச் செல்கின்ற ரோஹ்தங்க் மற்றும் ஸோஜி லா ஆகிய இரு வழித் தடங்களும் முழுமையாகப் பனிக்குள் புதைந்து விடும் என்பதால், ஒவ்வொரு குளிர் காலத்திலும் ஐந்து முதல் ஆறு மாத காலங்களுக்கு, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லடாக் முற்றிலும் துண்டிக்கப் பட்டுவிடும்.

குளிர்காலம் என்பது படை வீரர்களுக்குக் கடுமையான தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் ராணுவ உத்திகளைத் திட்டமிடுவோருக்கு உள்ள உண்மையான சவால் என்னவென்றால், “பாதைகள் மூடப்பட்ட” காலத்தில் லடாக்கில் உள்ள படை வீரர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கிடைக்கச் செய்வதை எவ்விதம் உறுதிப் படுத்துவது என்பதுதான். இது, ஒவ்வோர் ஆண்டும் ராணுவம் மேற்கொள்கின்ற மிகப் பெரிய போக்குவரத்து நடவடிக்கைகளில் ஒன்றாகும், இதற்கு ‘குளிர்காலத்துக்காக முன்கூட்டியே இருப்புவைத்தல்’ (ஏடபிள்யூஎஸ்) என்று பெயர்.

லடாக்கில் போக்குவரத்துப் பாதைகள் மூடப்படுகின்ற ஆறு மாத காலகட்டத்தில் படை வீரர்களுக்குத் தேவைப்படுகின்ற ஒவ்வொரு பொருளையும் கொள்முதல் செய்து, கொண்டுபோய்ச் சேர்ப்பது இதில் அடங்கும்.

பல மாதங்களுக்கு முன்பே இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விடும். டூத் பிரஷ் முதல் ஆடைகள் வரையான பொருள்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, உணவுப் பொருள்கள், எரிபொருள், மருந்துகள், ஆயுதங்கள், சிமென்ட், கூடாரங்கள் எனத் தேவைப்படும் அனைத்துப் பண்டங்கள் தொடர்பாகவும் விரிவான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.

லடாக்கை நோக்கிச் செல்லும் இரண்டு சாலைகளிலும் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு மும்முரமாக மேற்கொண்டிருக்கும் போதே, பதான்கோட் மற்றும் ஜம்முவைச் சுற்றியுள்ள ராணுவக் கிடங்குகளுக்கு பொருள்கள் வரத் தொடங்கிவிடும். போக்குவரத்துக்குச் சாலை தயார் என்று அறிவிப்பு வெளியான உடனேயே (மே மாத வாக்கில்), பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனங்களின் முதலாவது அணிவரிசை லடாக்கை நோக்கிக் கிளம்பி விடும்.

லேவுக்குச் சென்று திரும்பி வரும் ஒரு வழிநடைக்கு ஸோஜி லா பாதை வழியாக என்றால் 10 நாள்களும், ரோஹ்தங்க் பாதை என்றால் 14 நாள்களும் பிடிக்கும். இரண்டு வழித்தடங்களிலுமே, செல்லும் வழியில் ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காகத் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும். இந்த இரண்டு வார காலப் பயணத்தின் போது, ஒவ்வொரு நாள் இரவிலும் வேவ்வேறு இடத்தில் ஓட்டுநர் தூங்குவார், இந்தப் பயணத்தை முடித்த பின்னர், அடுத்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ஓட்டுநருக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுக்கப்படும்.

அடுத்த ஆறு மாத காலத்துக்கும் ஓட்டுநருக்கு இது தான் வழக்கமான நடைமுறை. ஒரு பருவத்துக்கு (சீஸனுக்கு), கரடுமுரடான மலைப் பாங்கான சாலைகளில் ஏறத்தாழ பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் டிரக்கை ஓட்டிச் செல்ல வேண்டும். ராணுவப் போக்குவரத்தில் வாடகைக்கு அமர்த்தப்படும் பொது டிரக்குகளும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிபொருள் டேங்கர்களும் இணைந்திருக்கும்.

லடாக்கில் பொருள்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதோடு போக்குவரத்துச் சவால்கள் முடிந்து விடுவதில்லை. இந்தப் பொருள்களை ராணுவ முன்வரிசை நிலைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகுந்த கடினமான பணி இன்னமும் பாக்கி உள்ளது. கார்கில் பிரிவிலும் சியாச்சினுலும் எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பெரும்பாலான ராணுவ நிலைகள், மோட்டார் வாகனங்கள் செல்லக் கூடிய சாலைகளால் இணைக்கப்படவில்லை.

பெரிய மூட்டைகள் பிரிக்கப்பட்டு சிறிய பேக்கேஜ்களாக மாற்றப்பட வேண்டும், டேங்கரில் உள்ள எரிபொருளை 20 லிட்டர் ஜெர்ரிகேன்களில் பிடித்து நிரப்ப வேண்டும், அதன் பின்னர் இவற்றை ராணுவ நிலைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பொருள்கள் அனைத்தும் இறுதி இலக்கைச் சென்றடைவதற்கு, மட்டக் குதிரைகளோடு ஆயிரக்கணக்கான சுமைதூக்கும் பணியாளர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ராணுவம் சாராத இந்தப் பொதுமக்கள்தான் நமது முன்வரிசை வீரர்களுக்கு ஜீவநாடி போன்றவர்கள் என்றால் அது மிகைப்படுத்திக் கூறும் வார்த்தை அல்ல. ராணுவத்துக்குச் சொந்தமான கோவேறுக் கழுதைகளும் பணியில் ஈடுபடுத்தப்படும். இந்தக் கால்நடைப் போக்குவரத்து ஓட்டுநர்கள் (அதாவது கால்நடை ஓட்டிகள்), உலகிலேயே மிகவும் கடினமான மலைப்பாதைகளில் ஒன்றான இங்கே, ஒரு பருவத்துக்கு வழக்கமாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று வருகின்றனர்.

படை வீரர்கள் தங்குவதற்கான உறைவிடங்களைக் கட்டுகின்ற பணியும் கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்படும், ஏனெனில் குளிர் காலத்தில் எவ்விதக் கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது. லடாக்கில் கூடுதல் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோடைப் பருவத்தில் இதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கும். ஜீரோ டிகிரிக்குக் கீழான குளிர் நிலையையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பு அளிக்கக் கூடிய வகையிலான, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கூடாரங்களை வாங்குவதோடு, அவற்றை போக்குவரத்து மூலம் கொண்டு வந்து சேர்த்து, குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும்.

பொருள்கள் மட்டுமல்ல, ஆட்களின் இடமாற்றமும் இதில் அடங்கும். கோடைப் பருவத்தில் சுமார் 2 லட்சம் பேர் லடாக்கில் இருந்து வெளியே செல்வார்கள். இதே எண்ணிக்கை அளவிலானவர்கள் விடுமுறை, பணியமர்வு மற்றும் படைவீரர்களின் சுழற்சி மாற்றம் என்ற வகையில் லடாக்குக்குள் வருவார்கள். விமானம் மூலம் செல்லும் இத்தகைய வீரர்களுக்காக, தில்லி மற்றும் சண்டீகரில் தற்காலிக முகாம்கள் மிக மும்மரமாக இயங்கும்.

இதில் இந்திய விமானப் படையின் பங்கு மதிப்பிட இயலாதது. சண்டீகரில் உள்ள விமானத் தளமானது அதிகாலைக்கு முன்பே மும்முரமான நடவடிக்கைகளால் இரைச்சலோடு காணப்படும். விடிந்த உடனேயே, தேவையான பொருள்களோடும், விடுமுறை முடித்துத் திரும்பும் படை வீரர்களோடும், முதலாவது போக்குவரத்து விமானம் லடாக்கை நோக்கிப் புறப்பட்டு விடும். லேயில் உள்ள விமானத் திடலில் இருந்தும் சியாச்சின் அடித்தள முகாமில் இருந்தும் எம்ஐ-17, துருவ் மற்றும் சீத்தா ரக ஹெலிகாப்டர்கள், உலகிலேயே மிகவும் அபாயகரமான பறக்கும் சூழலைச் சமாளித்தபடி, சியாச்சின் பிரிவில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பொருள்களைச் சுமந்து கொண்டு செல்லும். விமானப் படையின் போக்குவரத்து ஒத்துழைப்பு ஆண்டு முழுவதிலுமே நீடிக்கும், குறிப்பாக குளிர் காலங்களில், அது மட்டும்தான் லடாக்கை நாட்டின் இதர பகுதிகளோடு இணைக்கின்ற தொடர்பாகும்.

ஏடபிள்யூஎஸ் என்பது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்படுகின்ற நடவடிக்கையாகும், அது நவம்பரில் தான் முழுமை அடையும். நடப்புக் குளிர் காலத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் படை வீரர்கள் லடாக்கிலேயே தங்கியிருக்கத் தயாராக உள்ள நிலையில், வடக்கு கமாண்ட் மற்றும் லேயில் உள்ள போக்குவரத்து நிர்வாக அலுவலர்கள் இந்தச் சவாலை உரிய வகையில் சந்திக்க வேண்டியுள்ளது. அவர்கள் அதனைச் செய்து முடிப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. “கற்றுக்குட்டிகள் உத்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள், ஆனால் தொழில் திறனாளர்கள் பொருள்களின் போக்குவரத்து குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்” என்ற ராணுவச் சொல்வழக்கில் இந்த அலுவலர்கள் பெருமை கொள்வார்கள்.

இதையும் படிங்க: குழந்தைகள் மூலம் பரவும் கரோனா - ஐ.எம்.சி.ஆர் அதிர்ச்சித் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.