ETV Bharat / opinion

பிரணாப் எடுத்த முன்மாதிரி நடவடிக்கைகள் - பிரணாப் முகர்ஜி

வரலாற்றில் முதல்முறையாக ஒரு குடியரசு தலைவர் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுத்தது இவர் காலகட்டத்தில்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையேதான் தனது பதவிக்காலத்திலும் பிரணாப் செய்தார். குடியரசு தலைவர் மாளிகையில், ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பிரணாப் பாடம் எடுத்தார்.

பிரணாப்
பிரணாப்
author img

By

Published : Aug 31, 2020, 6:11 PM IST

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில், அலுவலகத்தை ஜனநாயகப்படுத்தும் வகையிலான பல அறிவிப்புகளை பிரணாப் வெளியிட்டார். 'மேதகு' என குடியரசு தலைவரை அழைக்க வேண்டாம் என உத்தரவிட்டார். ஆளுநர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மாளிகையை ஜனநாயகப்படுத்திய பிரணாப்

குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்வதற்கு விருந்தினர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பிரணாப் குடியரசு தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தினார்.

முன்னதாக, குடியரசுத் தலைவராக இருந்தவர்கள், தலைநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். ஆனால், இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகைலில் மாளிகைக்கு உள்ளேயே நிகழ்ச்சிகளை நடத்த பிரணாப் உத்தரவிட்டார்.

அவரச சட்டமும், கருணை மனுக்களும்

தனது பதவி காலத்தில், 26 அவசர சட்டத்திற்கு பிரணாப் ஒப்புதல் வழங்கியுள்ளார். பதவிக் காலம் நிறைவடையும் தருணத்தில் ஐந்து அவசர சட்டத்திற்கு அவர் ஒப்புதல் வழங்கினார்.

அந்த காலகட்டத்தில், அதிகபட்சமாக 30 கருணை மனுக்களை அவர் நிராகரித்தார். நான்கை மட்டுமே பிரணாப் ஏற்றார். இதற்கு முன்பு, வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்திருந்தார்.

கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். குறிப்பாக, நாராயணன் ஒரு கருணை மனு மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. கலாம், ஒரு கருணை மனுவை நிராகரித்த நிலையில், மற்றொன்றை ஏற்றுக் கொண்டார்.

இதற்கு நேரெதிராக, பிரதீபா பாட்டில் 34 கருணை மனுக்களை ஏற்று, நான்கை மற்றுமே நிராகரித்தார்.

ஆசிரியர் அவதாரம் எடுத்த பிரணாப்

வரலாற்றில் முதல்முறையாக பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த குடியரசுத் தலைவர் இவர்தான். குடியரசுத் தலைவராவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையேதான் தனது பதவிக்காலத்திலும் பிரணாப் செய்தார். குடியரசு தலைவர் மாளிகையில், ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தினார்.

அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர் பிரணாப் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் வளர்ந்துவரும் தீவிரவாதம் குறித்தும் அவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ட்விட்டரில் செயல்பட்ட குடியரசுத் தலைவர் அலுவலகம்

குடியரசு தலைவரின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே தெரிவிக்கும் வகையில், குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஜூலை 1ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 நாள்களில் அந்த பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது. அவரின் பதவிக்காலம் நிறைவடையும்போது, அந்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியிருந்தது.

அருங்காட்சியகம்

பிரணாப் குடியரசுத் தலைவராக இருந்தபோதுதான் ராஷ்டிரபதி பவனிலிருந்த குதிரைகளின் தொழுவம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்திய, வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு பொருள்கள், வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதன் பையனாக குடியரசு தலைவர் மாளிகையின் வரலாற்று குறிப்புகள் குறித்து மக்களிடையே தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய அருங்காட்சியகம் தற்போது அமைக்கப்பட்டுவருகிறது.

மக்கள்மயமாக்கப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை

நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக ராஷ்டிரபதி பவனை மாற்றும் நோக்கில் முகலாயர்களின் தோட்டம், ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகம் ஆகியவை 2016 ஜூலை 25ஆம் தேதி திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவராக பிரணாப் பதவியேற்ற ஐந்தாவது ஆண்டில் மட்டும், 94,000 பேர் மாளிகைக்கு வந்து சென்றுள்ளனர். 2017ஆம் ஆண்டு, முகலாயர்களின் தோட்டத்தில் நடைபெற்ற இறுதியாண்டு விழாவில், 6.95 லட்சம் சுற்றுலாவாசிகள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.