ETV Bharat / opinion

இந்திய சீன மோதல்: அரிய தாதுக்கள் காரணமா?

கிழக்கு லடாக்கில் மிகவும் மதிப்புமிக்க தாதுக்கள் நிறைந்திருப்பதற்கான அறிகுறி உள்ளதாக ஓ.என்.ஜி.சி-இன் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்...

India China clash
India China clash
author img

By

Published : Jul 30, 2020, 5:33 PM IST

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின் (ONGC) ஆராய்ச்சி பிரிவு கிழக்கு லடாக்கிலிலுள்ள பூகா பள்ளத்தாக்கு மற்றும் சுமாதாங் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பல அரிய வகை யுரேனியம், லாந்தனம், கடோலினியம் மற்றும் மதிப்புமிக்க பல உலோகங்கள் இப்பகுதியில் இருக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மிகவும் மதிப்புமிக்க தாதுக்கள் நிறைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியா-சீனா எல்லை மோதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஓஎன்ஜிசி-இன் இந்த கண்டுபிடிப்புகளின் நகல் நமது ஈடிவி பாரத்-திற்கு கிடைத்ததுள்ளது.

இருப்பினும் ஆராய்ச்சி முடிவுகளில் எந்த வகையான உலோகம் எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் தரப்படவில்லை.

இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இரு நாட்டு ராணுவங்கள் மோதிய சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், குளிர் காலத்தில் நீண்ட காலம் தங்குவதற்கு ஏற்ப இரு படைகளும் பள்ளங்களை தோண்டிவருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மிகவும் அரிதான பூமியை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளன, அவை தற்போதுள்ள வளர்ந்து வரும் ஆற்றல், அறிவியல் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அரிதான உலோகங்கள் கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள், சோலார் பேனல்கள், மின்சார கார்கள், செயற்கைக்கோள்கள், போர் விமான இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் இன்றியமையாதவை.

ஓஎன்ஜிசி நடத்திய முதற்கட்ட ஆய்வு 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், புவியியல் ஆய்வு மையமும், (GSI) “லடாக் பகுதியில் மிகவும் நம்பகமான புவிவெப்ப பகுதிகள் உள்ளன” என்று கூறியுள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் ஹைட்ரோகார்பன் இருப்புக்களும் உள்ளன என்பது குறித்தும் ஈடிவி பாரத் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவல் காரணமாகவும் இந்தியா-சீனா ராணுவ மோதல் காரணமாகவும் ஓஎன்ஜிசி ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போரோன், லித்தியம், சீசியம், வனடியம், யுரேனியம் மற்றும் தோரியம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் இருப்பைத் தீர்மானிப்பதைத் தவிர, ICP-MS (Inductively Coupled Plasma-Mass Spectrometry) முறையைப் பயன்படுத்தி புவிவெப்ப மூலத்தைப் பற்றி அறிவதற்கும் இந்த ஆய்வு பயன்படுகிறது.

‘அரிதானது’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இந்த தாதுக்கள் உண்மையில் அரிதானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவை செறிவூட்டப்பட்ட நிலைகளில் இல்லாததால் இதை தோண்டி எடுப்பதும், பிரித்தெடுப்பதும் ஒப்பீட்டளவில் எளிமையானது.

பல காலமாக சீனா, அரிய உலோகங்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. வணிக நோக்கத்தை காட்டிலும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த, சீனா பூமியிலுள்ள அரிய வளங்களை அதிகம் தன்வசப்படுத்த விரும்புகிறது என்று சர்வதேச அளவில் வெளியான பல அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில், சீனா 120,000 டன் அரிய உலோகங்களை உற்பத்தி செய்தன. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் 15,000 டன்களை உற்பத்தி செய்தன. ஆனால், 2018ஆம் ஆண்டு அமெரிக்கா பயன்படுத்தி அரிய உலோகங்களில் 80 விழுக்காடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், உலக அளவில் நடைபெறும் அரிய உலோகங்களின் வர்த்தகத்தில் 90 விழுக்காட்டை சீனாவே கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாப்டே உயிருக்கு ஆபத்து' Z ப்ளஸ் பாதுகாப்பில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.