வெப்ப தீ அலைகளை எதிர்த்துப் போராடும் பூமி:
தொடர்ச்சியான பேரழிவுகளில் உலகம் தத்தளித்து வருகிறது. எப்போதுமே எங்காவது பேரழிவு ஒரு தீயாக, ஒரு புயலாக, ஒரு வெள்ளமாக, ஒரு பஞ்சமாக அல்லது வேறு ஏதேனும் ஒன்றாக மக்களைப் பாதிக்கிறது. கடற்பகுதி முழுவதும் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அமெரிக்காவின் மேற்கு கடற்பகுதியில் 12 மாநிலங்களில் தீப்பற்றி எரிகிறது. இதனால் வான்பகுதி ஆரஞ்சு வண்ண தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. இந்த தீ 10 கி.மீ., தூரத்துக்குப் பரவியதில் இருந்து வந்த புகை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதி மாநிலங்களையும் சென்றடைந்து காற்றை அதிக அளவுக்கு மாசுபடுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 69 மில்லியன் ஏக்கர் பரப்பளவு காடு எரிந்து நாசமாகி இருக்கிறது. இதில் கலிஃபோர்னியாவில் 33 மில்லியன் ஏக்கர் பரப்பளவு எரிந்துள்ளது. காட்டுப்பகுதிகளில் தொடர்ந்து எங்காவது அல்லது இதர பகுதிகளில் ஆண்டு முழுவதும் தீப்பற்றி எரிகிறது.
வடதுருவத்தில் சைபீரியா முதல் தெற்கில் ஆஸ்திரேலியா வரை, கிழக்குப்பகுதியில் ஆசியா முதல் மேற்கு அமெரிக்க பசுபிக் கடல் வரை தீப்பற்றி எரிகிறது.
அனைத்து நாடுகளுக்குமான அச்சுறுத்தல்
இந்தியாவில் 21.4 விழுக்காடு வனப்பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நமது வனப்பகுதிகளில் கடந்த ஆண்டு 29, 547 தீ விபத்துகள் பதிவாகி உள்ளன. இந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் 190 பேர் உயிரிழந்தனர். நேபாளம், சாட், செனகல், சூடான், நைஜீரியா, கென்யா, புர்கினா பாசோ, கானா, பாகிஸ்தான், கேமரூன், அல்ஜீரியா, துனிசியா, வியட்நாம் மற்றும் உகாண்டா நாடுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
ஆகஸ்ட் மாதம் நமது நாட்டில் 11 மாநிலங்களில் 868 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் ஐந்தில் ஒரு பகுதி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியில் பட்டினி நிலவுகிறது. உலகில் 5 கோடியே 30 மில்லியன் பேர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பூமியில் பேரழிவுக்கு ஆளாகாத எந்த நாடும் இல்லை என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
இந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்று பொதுவாக வாழ்க்கையை முடக்கி போட்டிக்கும் நிலையில், எரிந்து கொண்டிருக்கும் காடுகளில் இருந்து கார்பன் வெளியேறுதலால், ஈரநிலம் 4 முதல் 7 விழுக்காடு வரை குறையும் என்று தெரிய வருகிறது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2030ஆம் ஆண்டு இறுதிக்குள் கார்பன் வெளியேறுவது 45 விழுக்காடு அளவுக்கு குறையும் என உலக வெப்பமயமாதல் எச்சரிக்கையாக குறிப்பிட்டபோதிலும், அதைப்பெற நாம் இதுவரை எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. அரசுகள், பொதுமக்கள் மற்றும் ஊடகம்கூட இந்த பிரச்னையை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. நமது நாட்டில் நடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் இந்த விஷயம் குறித்து குறிப்பிடவில்லை.
உலக சுற்றுச்சூழல் அமைப்புடன் இதர ஆறு முன்னணி அறிவியல் மையங்கள் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில், 'புவி வெப்பமடைதல் தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸை தாண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மிக விரைவில், இந்த அதிகரிக்கும் வரம்பு நிரந்தரமாக அதிகரிப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. கடந்த மாதம் இறுதியில் வெளியான இன்னொரு அறிக்கையில், 2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலை சிக்கல் காரணமாக 120 மில்லியன் மக்கள் இடம் பெயர்வார்கள் என்றும், ஒட்டு மொத்த உலகமும் மூழ்கக் கூடும் என்றும் தெளிவுபடுத்தி அந்த அறிக்கையில் உள்ளது. ஈக்குவடாரை கடந்து செல்லும் பசுபிக் கடல் இருக்கும் பகுதியில் வழக்கமான வெப்பத்தை விடவும் 0.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக தரைப்பகுதி வெப்பம் குறையும்போது அது 'லா நினா விளைவு' என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க - பசிபிக் கடற்கரையில் அதிகரித்து வரும் தீ விபத்துக்களின் தற்போதைய சூழ்நிலையில் இது ஏற்படுகிறது.
தீவிர பருவநிலைகள்
ஸ்பானிஷ் வார்த்தையான 'லா நினா' என்பதன் பொருள் சிறிய பெண் என்பதாகும். 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் சூழல் நிகழும் நிலையை எல் நினோ(சிறிய பையன்) என்று அழைக்கிறார்கள். லா நினா உலர்ந்த, வெப்பமான காற்றை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு பசிபிக் கடற்பகுதிகளில் கொண்டு வருகிறது. குளிர்ந்த மற்றும் ஈரமான காற்றை வடக்கு மற்றும் மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் கொண்டு வருகிறது. தவிர, இது முக்கிய புயல்கள் கிழக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் தோன்றுவதற்கான உகந்த இயற்பியல் நிலைகளை அளிக்கிறது. லா நினா என்பது ஒரு இயற்கை செயல்பாடாகும்.
முன்னணி வானியல் அறிஞர் மிக்கேல் மான் கூறுகையில், 'பருவநிலை மாற்ற நிகழ்வின் காரணமாக இது வெப்ப அலைகள், காட்டுத் தீ விபத்துகள், இணைந்து வரும் முக்கியமான புயல்கள் ஆகியவற்றை அதிகரிக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக லா நினா விளைவு நிகழ்ந்து வெப்பம் உயர்கிறது. அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவுகிறது. 1970ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ விபத்துகள் ஏற்படும் ஒரு ஆண்டு பரப்பளவு என்பது ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது.
கோடை காலத்தின் போது இது எட்டுமடங்காக மேலும் அதிகரிக்கும். அதிகரிக்கும் வெப்பத்துடன் புற்கள் மற்றும் மரங்கள் உலர்ந்து போவதின் காரணமாக இது ஏற்படுகிறது. அமெரிக்காவில் மேற்கு கடற்பகுதியில் காட்டுத் தீ விபத்துகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவுகின்றன. இந்த இடத்துக்கு கிழக்கே சில நூறு மைல் தூரத்தில், கொலராடோ மற்றும் வயோமிங் இருக்கின்றன. சராசரியாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வீழ்ச்சியுடன் பனிப்பொழிவு ஏற்படுகிறது. மாலை 7 மணி தொடங்கி அடுத்த நாள் காலை வரை தொடர்ந்து 18 மணி நேர காலகட்டத்துக்கு இவ்வாறு ஏற்படுகிறது. தரையில் 2 அடி உயரத்துக்கு பூமியில் பனிப்போர்வை போர்த்தப்பட்டிருப்பது போல இருக்கிறது. அதேநேரத்தில் அமெரிக்க வானிலை மையத்துறை முன்னறிவிப்பில், அதிகபட்சமாக 25 சூறாவளிகள் அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியில் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தீவிர பருவநிலைக்கு இது ஒரு அடையாள சின்னமாகும். இது போன்ற தீவிர பருவநிலை மாற்றங்கள் மற்றும் பருவநிலைகள் தமக்குத் தாமே புதிய சாதாரண வரம்பாக மாறுகிறது. இப்போது இது போன்ற நிலைகள் வளர்ச்சியடைந்து பூமியின் சராசரி வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இது நடந்தால், இப்போதைய மக்கள் தொகையில் 10 விழுக்காடு பேர் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கான இதுபோன்ற சூழலைத் தடுக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். மனிதர்களின் தீவிரமான செயல்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பேரழிவை மனிதர்கள் அவசியம் அகற்ற வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த வகையிலான மனித சமூகத்தின் முயற்சி நடவடிக்கை தேவை.
இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தல்:
கடந்த 12,000 ஆண்டுகளாக தொடர்ந்த மனித நாகரிகத்தின் மதிப்பீடுகளுக்கு பருவ நிலையானது மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியது ஏன்? இப்போது மனித சமூகத்தை அச்சுறுத்துவதாக அபாயகரமாக மாறியது ஏன்? விவாதத்துக்கு இடமற்ற வகையிலான உண்மையை அறிவியல் தெளிவாக கூறுகிறது. அதாவது இவை எல்லாமே இயற்கையின் விளைவாக ஏற்பட்டதில்லை. இந்தப் பருவநிலை மாற்றத்தின் ஒவ்வொரு தீவிரத் தன்மையின் பின்னும் மனிதனின் கால்களும் கைகளுமே இருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அர்ஹீரியஸின் ஆராய்ச்சியின் எச்சரிக்கையில், சூழலில் கார்பன் -டை- ஆக்சைடு அதிகரிப்பதால் 'புவி வெப்பமயமாதல்' ஏற்படும் என்று கூறப்பட்டது.
ஒட்டுமொத்தமாக உலகில் பொருளாதார வளர்ச்சியை அடையும் மனித சமூகங்கள் மற்றும் அரசுகளின் கருத்து காரணமாக பிரச்னைகள் அதிகரித்துள்ளன. எனினும், புவி வெப்பமயமாதல் 1988இல் ஏற்பட்டதாக ஜேம்ஸ் ஹான்சென் கூறுகிறார். 1990ஆம் ஆண்டு அரசுகளுக்கு இடையேயான பருவநிலை மாற்ற முதலாவது குழு அமைக்கப்பட்டது.
எனினும், அறிக்கையின் முடிவில், புவி வெப்பமயமாதலின் அபாயம் கூறப்பட்டுள்ளது. மொத்தக் காற்று உமிழ்வில் கடந்த 30 ஆண்டுகளில் காற்றில் கார்பன் உமிழ்வு என்பது 62 விழுக்காடாக இருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச கருத்தரங்குகளைத் தொடங்கியது. அபாயகரமான நிகழ்வுகளின் அடையாளம் மற்றும் முன்னறிவிப்புக்குப் பின்னரே பெரும்பாலான கார்பன் உமிழ்வுகள் நடைபெற்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.
'பசுமைக் குடில்' வாயுக்களின் அதிகரிப்பின் மூலம் பூமியின் ஆற்றல் மட்டத்தின் சமநிலையை நாம் குலைத்து விட்டோம். 2015ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பாரீஸ் ஒப்பந்தத்தின்போது, தரைப்பகுதி வெப்பத்தின் சராசரி அதிகரிப்பை 1.5-2 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் கட்டுப்படுத்துவோம் என்று கூறிய நாடுகள், அதனை அமல்படுத்துவதில் நிர்வகிப்பதில் தோல்வியடைந்து விட்டன. ஒவ்வொரு ஆண்டும் நிலையான அடிப்படையில் உமிழ்வு தொடர்கிறது.
டாக்டர்.கே.பாபு ராவ்(சுற்றுச்சூழல் வல்லுநர்)