ETV Bharat / opinion

அரசியலில் குற்றவாளிகள் நுழைவதைத் தடுக்குமா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு?

தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதைத் கட்டுப்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்திருந்த உத்தரவு குறித்து வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் (Study of Developing Societies) அரசியல் ஆய்வாளர் சஞ்சய் குமார் ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

author img

By

Published : Jul 26, 2020, 8:10 PM IST

Curbing entry of criminals in Indian Politics

குற்றப் பின்னணி கொண்ட நபரைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதற்கான காரணங்களை விளக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு, அரசியல் கட்சிகள் மீது தார்மீக அழுத்தத்தை உருவாக்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கக்கூடும். ஏனெனில், அத்தகைய வேட்பாளருக்கு கட்சி ஏன் வாய்ப்பு வழங்கியது என்பது குறித்து பொது அரங்கில் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அரசியல் கட்சிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் தார்மீக அழுத்தத்தை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குவதைத் தாண்டி தீர்ப்பு ஒரு அங்குலம்கூட செல்லவில்லை.

இதில் எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், இத்தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது போதுமான தார்மீக அழுத்தத்தை உருவாக்கினால் அத்தகைய வேட்பாளர்களை நியமிப்பதற்கு எதிராகத் திடீரென முடிவு செய்துவிட்டால், குற்றவியல் பின்னணி உள்ள வேட்பாளரை பரிந்துரைக்கும் முன் அவர்கள் இருமுறை யோசிப்பார்களா? தேர்தலில் குற்றவாளிகளைத் தடுக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியில் முன்னேற இந்தத் தீர்ப்பால் உதவ முடியுமா?

அரசியலில் குற்றவாளிகள் இருப்பது என்பது இந்திய அரசியல் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாகும். தொடர்ச்சியாக நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 24 விழுக்காடு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது 2009ஆம் ஆண்டு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற தேர்தில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிட கட்டுப்பாடுகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தபட்சம் இந்த விஷயம்கூட மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 விழுக்காடு உறுப்பினர்கள் குற்றப் பின்னணியுடன் உள்ளனர். பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குற்றப் பதிவுகளைப் பொறுத்தவரை, பெரியளவில் மாற்றமில்லை. பெரும்பாலான மாநில சட்டப்பேரவைகளில் குற்றப் பின்னணி உடையவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தல்கள், ஆம் ஆத்மி கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றிபெற்றது. அதே நேரம் குற்றப் பின்னணி கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகரித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், 2015ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2020ஆம் ஆண்டு தேர்தலில் இது 42ஆக அதிகரித்துள்ளது.

கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுக்கத்தக்க பேச்சு உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 2015ஆம் ஆண்டு 14இல் இருந்து உயர்ந்து 2020ஆம் ஆண்டு 37ஆக உள்ளது.

நாடாளுமன்றத்தைப் போலவே, டெல்லி சட்டப்பேரவையில் மாற்றத்திற்கான அரசியலை வழங்குவதாக உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சியாவது இதில் மற்ற கட்சிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்திருந்தபோதும், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை.

சமீபத்திய தீர்ப்பில், வேட்பாளர்களை நியமிக்கும்போது அரசியல் கட்சிகளுக்கு ஆறு வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் விதித்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் களமிறக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை, அதன் வலைத்தளங்களில் பதிவேற்றுவதை இந்தத் தீர்ப்பு கட்டாயமாக்குகிறது.

அரசியல் கட்சி அந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதை நியாயப்படுத்துவதையும், குற்ற வழக்குகள் இல்லாமல் ஒரு வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்குவதையும் இத்தீர்ப்பு கட்டாயமாக்குகிறது.

இந்த வழிகாட்டுதல்களின்படி, வெல்லக்கூடியவர் என்ற விளக்கம் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்காது. அதன்படி, இந்தத் தகவல்கள் ஒரு உள்ளூர் மற்றும் ஒரு தேசிய செய்தித்தாளில் கட்சியின் சமூக ஊடக கணக்குகளிலும் வெளியிடப்பட வேண்டும்.

இவை அனைத்தும் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த 72 மணி நேரத்திற்குள் கட்சி ஒரு இணக்க அறிக்கையை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பும்.

இது அரசியல் கட்சிகள் மீது சில தார்மீக அழுத்தங்களை உருவாக்கும், இது வேட்பாளர் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும். ஆனால், இவை குற்றவாளிகள் அரசியலில் நுழைவதைத் தடுக்க உதவுமா என்றால் இல்லை என்பதே நிதர்சனமாான உண்மை.

வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் (CSDS) நடத்திய ஆய்வுகள் இந்திய வாக்காளர்களில் 65 விழுக்காட்டினர் கட்சிக்குத்தான் வாக்களிக்கின்றனர். மிகச் சிலரே வேட்பாளரின் தரத்தை மனதில் வைத்து வாக்களிக்கின்றனர்.

அரசியல் கட்சிகள் தார்மீக அழுத்தத்தைப் புறக்கணித்து குற்றப் பின்னணிகளுடன் உள்ள வேட்பாளர்களைத் தொடர்ந்து களமிறக்கினால், இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களின் வரம்பை உணர்ந்து, உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பரில் அளித்த தீர்ப்பில், அரசியலில் குற்றவாளிகளை நுழைவதைத் தடுக்க சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதற்கு இதுவரை எந்தப் பயனும் இல்லை.

இந்தத் தீர்ப்பு அரசியலில் குற்றவாளிகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவதில் தேர்தல் ஆணையத்திற்குப் போதுமானதாக இருக்காது, ஆனால் இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் பரப்புரைகளுக்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை எந்தக் கட்சிகளும், விரும்பமாட்டார்கள். எனவே, வேட்பாளர்களை அறிவிக்கும்போது கட்சிகள் மிகவும் கவனமாக இருக்கக்கூடும்.

ஆனால் நீதித்துறை அமைப்பில் ஒரு சீர்திருத்தம் ஏற்படும் வரை அரசியலில் குற்றவாளிகள் இருப்பதை தடுக்க முடியாது. அதிவிரைவு நீதிமன்றங்களை உருவாக்குவது மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அவசியம்.

கீழமை நீதிமன்றத்திலிருந்துகூட கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் மோசமான யோசனையாக இருக்காது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு என்று பெருமைப்படும் நாம், எந்த வகையான ஜனநாயகத்தைப் பெருமைப்படுத்த விரும்புகிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

குற்றவாளிகளைத் தேர்ந்தெடுப்பது ஒன்று; குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுப்பது மற்றொன்று. காலம் வேகமாகச் செல்வதால், இந்த முக்கியமான கட்டத்தில், அரசியலைச் சுத்தம் செய்வதற்கான அழைப்புகளின் அவசரம் முன்பை போல இல்லை. மிகவும் தாமதமாவதற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

இதையும் படிங்க: கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் 'டோனட் பொருளாதாரம்' ஏன் முக்கியமானது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.