ETV Bharat / opinion

கோவிட்-19 மேலாண்மை – அண்டை நாடுகளிடமிருந்து இந்தியா கற்க வேண்டியது என்ன?

தென்கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் தணிப்பு ஆகியவற்றை ஒப்பீட்டளவில் சிறப்பாக நிர்வகித்து வந்தாலும், இந்திய சூழலுக்கு குறிப்பிட்ட படிப்பினைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றன என இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் மூத்த பொது சுகாதார அறிவியலாளரும் மருத்துவருமான பிரியா பாலசுப்பிரமணியம் என தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 19, 2020, 3:44 PM IST

கோவிட்-19
கோவிட்-19

கோவிட்-19 தொற்றுநோயின் விரைவும் வேகமும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார சேவைகளின் தேவை மற்றும் அணுகல் ஆகியவற்றின் அதிகரிப்புகளை சமாளிக்கும் திறமைக்கு சவால் விடுத்துள்ளது. புதிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைக் குறைக்கும் நோக்கில், பெரும்பாலான நாடுகள் குறைந்தபட்சம் சில நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குவரத்தை நிறுத்துதல் / கட்டுப்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மூடுவது, பொதுக் கூட்டங்களைத் தடை செய்தல், தனிமைப்படுத்தலைச் செயல்படுத்துதல், கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிவதை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், ஒவ்வொரு நாடும் கோவிட்-19 அச்சுறுத்தலை சமாளிக்க வெவ்வேறு நடவடிக்கைகளை வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கொண்டன அல்லது மேற்கொள்கின்றன. இதன் காரணமாக தொற்று வீதங்களை நிர்வகிப்பதில் மாறுபாடுகள், தொற்றுநோயியல் வளைவில் உள்ள வேறுபாடுகள், சமூக மற்றும் பொருளாதார செலவுகளில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அறிக்கை தரநிலைகள், வெவ்வேறு சுகாதாரத் திறன், சோதனை மேற்கொள்ள வெவ்வேறு அணுகுமுறைகள் மற்றும் தொற்றுகளை கண்டுபிடிப்பதற்கான வெவ்வேறு அணுகுமுறைகள் இருப்பதால், அவற்றுக்கு இடையிலான பொதுவான ஒப்பீடுகள் தவறாக வழிநடத்தும் என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொற்று பரவலை தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் குறுகிய மற்றும் நீண்ட காலங்களில் தேவைப்படும் மிகவும் துல்லியமான மற்றும் இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஆறு நடவடிக்கை உத்திகளை பரிந்துரைக்கிறது, இதில் 1) சுகாதார மற்றும் பொது சுகாதாரப் பணியாளர்களை அதிகப்படுத்துதல், பயிற்றுவித்தல் மற்றும் பயன்படுத்துதல் 2) சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு தொற்றையும் கண்டறிய சமூக அளவில் அமைப்புகளை செயல்படுத்துதல் 3) சோதனை திறன் மற்றும் சோதனைகளை அதிகரித்தல் 4) நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்குமான வசதிகள் 5) ஒரு தெளிவான தகவல்தொடர்பு திட்டம் மற்றும் தொடர்பில் இருந்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கான செயல்முறை 6) இறப்பைக் குறைக்க அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பராமரித்தல்

தென்கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் தணிப்பு ஆகியவற்றை ஒப்பீட்டளவில் சிறப்பாக நிர்வகித்து வந்தாலும், இந்திய சூழலுக்கு குறிப்பிட்ட படிப்பினைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றன. உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நடவடிக்கைகளைப் பின்பற்றியதன் மூலம் பிராந்தியத்தில் உள்ள மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு கோவிட்-19 மேலாண்மை மற்றும் தயார்நிலைக்கு தேவையான பயனுள்ள படிப்பினைகளை வழங்குகிறது.

நகர்ப்புறங்களில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் எதிர்கொள்வதற்கும் சிங்கப்பூர் நாடு ஒரு சிறந்த வழிமுறையை வழங்குகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் கோவிட்-19 கண்டறியப்பட்ட ஆரம்ப நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும், மேலும் மே-ஜூன் மாதத்திற்குள் இந்த பிரதேசத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. என்றாலும், இந்த கட்டுரையை எழுதும் தருணத்தில் இப்போது 55,580 உறுதி செய்யப்பட்ட தொற்றுகளில் 51,049 குணமானார்கள் மற்றும் 27 பேர் இறந்துள்ளனர்.

தொற்றுநோயை கட்டுப்படுத்துவது என்பது முழு அரசாங்க ஒத்துழைப்புடன் கூடிய பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது. சிங்கப்பூர் சார்ஸ் நோயில் பரவலின் அதன் முந்தைய அனுபவத்தைப் கொண்டு, கோவிட்டை எதிர்கொள்ள பல அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் பரவலை எதிர்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடு, பணியில் சுகாதார ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்துதல் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு திறனை உருவாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டது

சுகாதார அமைச்சகத்தின் தொடர்பு தடமறியும் குழுக்களுக்கும், சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதல் மற்றும் முகமூடிகளை அணிந்து கொள்வதை உறுதிபடுத்த சிங்கப்பூர் காவல்துறையின் துணைப் படைகளுக்கும் ஒருங்கிணைப்பு இருந்தது என்பது அத்தியாவசிய இரண்டு துறைகளுக்கிடையே உள்ள ஒத்துழைப்பின் ஒரு எடுத்துக்காட்டு.

பொது சுகாதார மையத்தை பயன்படுத்தி பரிசோதனை மூலம் ஆரம்ப சுகாதாரத் திறனை மேம்படுத்துதல் அவற்றில் ஒன்று . ஒவ்வொரு குடிமகனையும் பரிசோதிப்பது சாத்தியமில்லை என்பதாலும் ஆய்வகங்களை அதிகமான மக்கள் நாடுவார்கள் என்பதாலும், அதனை நிர்வகிப்பதற்கான ஒரே வழி, அதிக ஆபத்துள்ள நோயாளிகளை விரைவாக அடையாளம் கண்டு பரிசோதிப்பது தான். சிங்கப்பூர் முதலில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார்துறையினரை உள்ளடக்கிய 1000க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்கள் மூலம் மேற்கொண்டது. இது ஆரம்ப கட்ட மருத்துவர்களுக்கு கூடுதல் பயிற்சி மற்றும் பரவலுக்கான தயார்நிலையை உருவாக்கியது.

இது அதிரடியாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கான இலக்காக இருந்தது. இந்தியாவைப் போலவே, சிங்கப்பூரும் அதன் வெளிநாட்டு குடியேறு தொழிலாளர்களின் தனிமைப்படுத்த முடியாத கோவிட் தொற்றாளர்களின் பெரும் வருகையைக் கொண்டிருந்தது.

மக்கள்தொகையை உடனடியாக துரிதமாக குறிவைத்து சோதனை செய்ததன் மூலமும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடங்களில் அவர்களை தனிமைப்படுத்துவதோடு, கோவிட் நேர்மறை தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகளை மீண்டும் பரிசோதனை செய்ய வசதியாக தனிமைப்படுத்தியதால், வைரஸ் பரவும் தொடர்சங்கிலியை கட்டுப்படுத்தவோ அல்லது முறிக்கவோ முடிந்தது.

நிலையான பொது சுகாதார தொடர்பு என்பது தெளிவான, வெளிப்படையான மற்றும் அடிக்கடி நிகழ்கிற, நிச்சயமற்ற தன்மைகள் கொண்டதாக இருந்தாலும் தகவல்களில் இருந்த இடைவெளிகள் குறிப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

தகவல்தொடர்பு என்பது பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பை உள்ளடக்கியது. ஒரு வழி செய்தியாக தேசிய அளவிலான வாட்ஸ்அப் குழு வழியாக அரசாங்கம் நம்பகமான தகவல்களை குடிமக்களுக்கு அடிக்கடி மற்றும் சீரான இடைவெளியில் வழங்கி, இறுதியாக, சுகாதாரப் பணியாளர்களின் மிக முக்கியமான எடுத்துச் செல்லுதல், அணிதிரட்டல் மற்றும் திரட்டுதல்.

தொற்றுநோய் முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள் துணைத் தொழிலாளர்கள், சுகாதார துறை சாராத தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு சுகாதார மற்றும் நகர்புற வசதிகளை மேற்கொள்ள முன்னணி நிபுணர்களுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். கோவிட் மற்றும் கோவிட் அல்லாத சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

புதிய கரோனா வைரசுக்கு எதிரான வியட்நாமின் தெளிவான நடவடிக்கை உலகின் மிக வெற்றிகரமான ஒன்றாகும். ஏப்ரல் மாத மத்தியில் இருந்து, நாட்டின் புதிய தொற்றுநோய்கள் என்பது வெளிநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் மட்டுமே இருந்தன, இருப்பினும் சமீபத்திய வாரங்களில் உள்ளூர் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. வியட்நாமின் உத்தி மீண்டும் ஒரு சமூகத்தின் முழு அணுகுமுறையையும் உள்ளடக்கியது: ஆரம்பத்தில், பிரதமர் பொருளாதார அக்கறைகளுக்கு மேலாக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தார், வியட்நாம் அரசு தொற்றுநோயைத் தடுக்கும் தேசிய வழிகாட்டும் குழுவுடன் இணைந்து தேசிய நடவடிக்கை திட்டத்தை வெளியிட்டது.

வைரஸுக்கு எதிராக குடிமக்களை ஒன்றிணைக்க பொது செய்தியில் போரின் ஒரு உருவகமாக, கரோனா வைரஸுக்கு எதிரான போர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அரசின் பல்வேறு நிலைகளில் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தகவல்தொடர்புகளை ஒருங்கிணைக்க இது மிகவும் பயன்பட்டது. இராணுவம், பொது பாதுகாப்பு சேவைகள் மற்றும் கீழ்மட்ட அமைப்புகளின் உதவியுடன் தணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு உத்தி விரைவாக பயன்படுத்தப்பட்டது, இது பின்வரும் மூன்று நடவடிக்கைகள் மூலம் செய்யப்பட்டது.

விரைவான கட்டுப்பாடு:

விமான நிலையத்தில் பரிசோதனைகள், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு பயணிகள் மீதான பயணத் தடை, வெளிநாட்டின் இருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்துவது, பள்ளிகளை மூடுவது மற்றும் பொது நிகழ்ச்சிகளை ரத்துசெய்தல் போன்றவை இதில் அடங்கும்

உலக சுகாதார நிறுவன பரிந்துரைக்கு முன்பே, பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினியை வைத்ததோடு, பொது இடங்களில் முககவசம் அணிவது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசியமற்ற சேவைகள் நாடு தழுவிய அளவில் நிறுத்தப்பட்டன, மேலும் நாட்டின் பெரும்பகுதியில் போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலைகளில் விரைவான கட்டுப்பாடு:

பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகளில் செலவு அதிகமான சோதனை உத்திகள் முயற்சிக்கப்பட்டாலும், வியட்நாம் அதிக ஆபத்து மற்றும் சந்தேகத்திற்கிடமான தொற்றுகளில் கவனம் செலுத்தி சோதனை மையங்களை மே மாதத்திற்குள் 120 இடங்களில் நாடு முழுவதும் அமைத்தது.

சார்ஸ் பரவலில் இருந்து, வியட்நாம் காலப்போக்கில் தொற்றுநோயியல் சான்றுகளை உருவாக்கி வருவதன் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான இடங்களில் பொதுமக்களை தனிமைப்படுத்துவதை நடைமுறைப்படுத்தி, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் 1,000 பேர் சோதிக்கப்பட்டது உலக அளவில் மிக உயர்ந்த விகிதமாகும்.

பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டவுடன், அவர் ஒரு பல்கலைக்கழக தங்குமிடம் அல்லது இராணுவ முகாம்கள் போன்ற அரசுக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அந்த சமயத்தில் அவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் கூட இந்த இடங்களில் காத்திருப்பில் வைக்கப்பட்டனர்

இதற்கு இணையாக, மூன்றாம் நிலை தொடர்புகள் வரை விரிவான தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவை இருந்தன. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளருக்கு அருகில் வாழ்ந்த மக்கள், சில நேரங்களில் மொத்த தெரு அல்லது கிராமம், விரைவாக சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, சமூக பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 4,50,000 பேர் மருத்துவமனைகள் அல்லது அரசு நடத்தும் தங்குமிடம் அல்லது சுய-தனிமைப்படுத்தல் போன்றவற்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தெளிவான, சீரான, ஆக்கபூர்வமான பொது சுகாதார செய்தி:

பல தரப்பு மக்களை உள்ளடக்கிய, சமூக அடிப்படையிலான பொறுப்பை ஊக்குவிப்பது முக்கியமானது என்பதை நிரூபித்தது. ஆரம்ப நிலையிலிருந்தே, வைரஸ் பற்றிய தகவல்தொடர்புகள் மற்றும் உத்திகள் வெளிப்படையாக இருந்தன. அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனை மையங்கள் பற்றிய விவரங்கள் ஊடகங்கள், அரசாங்க வலைத்தளங்கள், பொதுமக்களின் கீழ்மட்ட அமைப்புகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தைகள், மொபைல் போன்களில் குறுஞ்செய்திகள் மற்றும் குரல் செய்திகள் வழியாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நன்கு ஒருங்கிணைந்த பல ஊடக அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான செய்திகள் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதுடன், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்க சமூகத்திற்கு உதவியது. அதிலும் ஒவ்வொரு குடிமகனும், பொது இடத்தில் முகமூடி அணிவது அல்லது சில வாரங்கள் தனிமைப்படுத்தப் படுவது போன்றவற்றின் மூலம் தங்கள் பங்களிப்பை செய்வதற்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தனர்.

நமது நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவு தேசமான இலங்கை, தனது நாட்டின் தொற்றுநோயை ஒப்பீட்டளவில் நன்றாகக் கட்டுப்படுத்த முடிந்தது. இலங்கையின் சுகாதார அமைப்பு, நாடு முழுவதும் அணுகக்கூடிய மருத்துவமனைகள், அதிக தகுதி வாய்ந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய பொது சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு பிராந்தியத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

எவ்வாறாயினும், சமூக பரவலை நிர்வகிப்பதற்கான திறன் இல்லாததால், கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டது, அதற்கான தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் மேற்பார்வை முதல் தொடர்புத் தடமறிதல் வரை உள்ள பொறுப்பை இராணுவம் ஏற்றது.

காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை நிர்வகித்து, விதிமீறல்கள் நடப்பதை தடுப்பது, சந்தேகத்திற்குரிய, விதியை மீறுபவர்களை கைது செய்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். நாட்டிற்கு வரும் விமானங்களை தடை செய்வது, சந்தைகள் மற்றும் பொது போக்குவரத்து நிலையங்களில் அடிக்கடி கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பிற கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது, இந்த அனைத்து நடவடிக்கைகள் மூலம் பரவல் வீதத்தைக் கட்டுப்படுத்தியதற்காக இராணுவ மற்றும் காவல்துறையினரின் பாராட்டைப் பெற்றனர்.

இந்த நாடுகளிலிருந்து இந்திய மாநிலங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய இரண்டு நிலையான படிப்பினைகள் உள்ளன.

முதலாவது நோய் கண்காணிப்பு அமைப்பு முறை. பல தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள் பற்றி அதன் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட இலங்கை, வலுவான பொது சுகாதார கண்காணிப்பில் முதலீடு செய்து தற்போதைய கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாடு ஏற்கனவே இலவச மென்பொருள் DHIS2 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்காணிப்பு முறையை 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் உருவாக்கியுள்ளது. மற்றும் ஜனவரி மாதத்தில் முதல் தொற்று தோன்றிய உடனேயே தொற்றுநோயின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான கோவிட்-19 சந்தேக நபர்களைக் கண்காணித்தது.

சுவாச நோய்கள் உள்ள எந்தவொரு நோயாளியையும் கண்டறிய, பொது சுகாதார கண்காணிப்பு செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்தது. தொற்றுகள் அடையாளம் காணப்பட்டவுடன், தேவையான நோயறிதல்களை நாம் மேற்கொண்டோம், இதனால் சந்தேகத்திற்குரிய கோவிட்-19 தொற்றுகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது.

இரண்டாவது, இலங்கை அதன் ஆரம்ப சுகாதார வலையமைப்பை தொடர்ந்து நம்பியிருந்தது. பரவலின் போது பொது சுகாதார மையங்கள் மூடப்பட்டிருந்தாலும், அதற்கு பதிலாக அரசாங்கம் வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கத் தொடங்கியது.

கோவிட் அல்லாத நோயாளிகள், கோவிட் அல்லாத நிலைமை குறித்த சந்தேகங்களை சுகாதார ஊழியர்களிடமிருந்து ஆலோசனை பெற்று நிவர்த்தி செய்வதற்கு அனுமதிக்க ஒரு ஹாட்லைன் உருவாக்கப்பட்டது.

ஒரு சுவாரஸ்யமான ஒப்புமை உள்ளது, அங்கு நாட்டின் சுகாதார அமைப்புகள் கால்பந்து போன்ற அணி விளையாட்டுகளுடன் ஒப்பிடப்படுகின்றன, அங்கு பல வீரர்கள் கூட்டாக சேர்ந்து கோல் அடிப்பதற்கும், போட்டியை வெல்வதற்கும் பங்களிக்கின்றனர்.

இதேபோல், கோவிட்-19இன் போது சுகாதார வழங்கல் மற்றும் அணுகல் போன்ற பல்வேறு நிலைகளில் சுகாதார மற்றும் நோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், தணிக்கவும், கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நிலைகளில் உள்ள நபர்கள் ஒன்று சேர வேண்டும். நோய் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு நல்ல சுகாதார நன்மைகளை உருவாக்குவதற்கும் ஒரு உத்தியை வகுக்கவும் நன்கு ஒருங்கிணைந்த, ஒழுங்கமைந்த குழு இருக்க வேண்டும்.

இந்த இலக்கு குறித்த நடவடிக்கைகள் சுகாதாரப் பாதுகாப்பு முறை மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பது கட்டுப்படுத்தலின் அடுத்த கட்டங்களுக்கு இந்திய மாநிலங்கள் செல்லும்போது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

கட்டுரை ஆசிரியர் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் மூத்த அறிவியலாளர். கட்டுரையில் உள்ள கருத்துகள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகள். ஈடிவி பாரத்தின் கருத்துகள் அல்ல.

இதையும் படிங்க: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே விமானப் போக்குவரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.