ETV Bharat / opinion

ஏமாற்றத்தில் முடிந்ததா அமித் ஷாவின் சென்னை பயணம்? - திமுக எதிர்ப்பு வாக்கு

அதிமுக கூட்டணி, ரஜினிகாந்த், அழகிரி உடன் சந்திப்பு என அனைத்திற்கும் அமித் ஷாவின் சென்னை வருகை விடை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தவிர்த்து மீதி இரண்டு விஷயம் அமித் ஷாவின் கணக்குப்படி நடைபெறவில்லை என்று கூறப்படுகின்றது.

அமித் ஷா
அமித் ஷா
author img

By

Published : Nov 22, 2020, 7:22 PM IST

பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா சென்னை வருகையின் போது நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இரண்டு சந்திப்புகளும் நடைபெறாமல் டெல்லி திரும்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

"அதிமுக - பாஜக கூட்டணி வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் 2021க்கும் தொடரும்" என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகிகளை சந்தித்த அமித் ஷா
பாஜக நிர்வாகிகளை சந்தித்த அமித் ஷா
அதிமுக கூட்டணி, ரஜினிகாந்த், அழகிரி உடன் சந்திப்பு என அனைத்திற்கும் அமித் ஷாவின் சென்னை வருகை விடை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தவிர்த்து மீதி இரண்டு விஷயம் அமித் ஷாவின் கணக்குப்படி நடைபெறவில்லை என்று கூறப்படுகின்றது.
அரசு விழா
அரசு விழா
நடிகர் ரஜினிகாந்தின் நலம் விரும்பி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி - அமித் ஷா சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகின்றது. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி குருமூர்த்தி அமித் ஷாவிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகயுள்ளது. சுமார் முன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அரசு விழா
அரசு விழா
இதே போல் அழகிரியின் தீவிர ஆதரவாளர் கே.பி. ராமலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, அழகிரி - அமித் ஷா சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடைபெறவில்லை. அழகிரி தொடர்ந்து பாஜகவில் சேர்வது தொடர்பான செய்திகளை மறுத்து வருகிறார். ரஜினிகாந்த், அழகிரி என இருவரும் அமித் ஷாவிற்கு பிடி கொடுக்கவில்லை என்பதால் அவரின் சென்னை பயணத்தின் முழு நோக்கம் நிறைவேறாமல் போனது.
ரஜினியுடன் அமித் ஷா
ரஜினியுடன் அமித் ஷா

இதை பற்றி நம்மிடம் தொலைபேசி மூலம் பேசிய ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆசிரியர் திருநாவுக்கரசு கூறும்போது, " அமித் ஷா தரப்பிலும் சரி, ரஜினிகாந்த், அழகிரி தரப்பிலும் சரி சந்திப்பு பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை. அனைத்தும் யூகங்கள் அடிப்படையில் பேசப்பட்டுவருகின்றது. அதே போல் அமித் ஷா சென்னை வருகை 100 விழுக்காடு வெற்றி என கூறிவிட முடியாது. ஏனென்றால், அதிமுக-பாஜக கூட்டணி உறுதி தவிர மீதி கட்சிகள் நிலைபாடு என்ன எனவும் தெரியவில்லை, அந்த கட்சி தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து பேசவும் இல்லை" என தெரிவித்தார்.

அமித் ஷா
அமித் ஷா
தொடர்ந்து பேசிய அவர், " பாஜக நோக்கம் அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் முழுவதும் திமுகவிற்கு சென்றுவிட கூடாது அதை பிரிக்க வேண்டும் என்பது தான். இதனால் ரஜினிகாந்த், அழகிரி போன்றவர்கள் வருகையை எதிர்பார்பார்கள்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.