ETV Bharat / opinion

ஹைதராபாத்தின் கிரீடத்தில் ஓர் அபூர்வமான ஆபரணம் - பசுமை தெலங்கானா திட்டம்

திரைப்பட நடிகர், நடிகைகளிலிருந்து பல்வேறு துறைசார்ந்த பெரிய மனிதர்கள் வரை ஏராளமான மக்கள் இந்தப் பசுமை முனைப்புத் திட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது உற்சாகமான நிகழ்வாக விளங்குகிறது. ஆகப்பெரிய அளவில் நூற்றுக் கணக்கான நாற்றுக் கன்றுகளை நட்டுப் பசுமைச் சூழலைப் பரவலாக்குவது என்பது சொந்த லாபத்திற்காக மேற்கொள்ளும் குறுகிய அரசியல் விளம்பர தந்திரோபாயமாக இருக்க வாய்ப்பே இல்லை.

ஹைதராபாத்
ஹைதராபாத்
author img

By

Published : Feb 23, 2021, 1:22 PM IST

உலகத்திலே உச்சத் திறன் கொண்ட ஒரு மாநகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற விழையும் ஹைதராபாத் மாநகரத்தின் அழகான மணிமுடியில் ஓர் அபூர்வமான ஆபரணம் சேர்ந்திருக்கிறது. எங்கெங்கும் பசுமையைப் பரப்பும் அதன் முயற்சிகளைக் கெளரவப்படுத்தும் வெகுமதியாக, ஐக்கிய நாட்டுச் சபையின் அமைப்பான உணவு, வேளாண்மை நிறுவனத்துடன் (ஃபுட் அண்ட் அக்ரிகல்சர் ஆர்கனைஷேசன் - எஃப்ஏஓ) இணைந்து பணியாற்றும் ஆர்பர் டே பவுண்டேஷன் ஹைதராபாத்தை 2020-க்கான ‘மரங்களின் மாநகரம்’ என்று அங்கீகரித்திருக்கிறது.

இதில் மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால், இந்த விருது கிடைத்தது ’கோடி விரிக்‌ஷார்ச்சனா’ (கோடி மரங்களைத் தொழுதல்) என்ற திட்டம் தொடங்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் என்பதுதான். தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் பிறந்தநாளின் போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. நமது நாட்டில் ஹைதராபாத் மாநகரம் மட்டும்தான் இந்தக் கெளரவத்தை, மரியாதையைச் சம்பாதித்து இருக்கிறது. பசுமை நேசர்கள் அனைவருக்கும் இதுவோர் ஆனந்தமான செய்தி.

’பசுமை தெலங்கானா’ திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, மாநிலங்களவை உறுப்பினரான சந்தோஷ் குமார் 2017 ஜூலையில் பசுமை இந்தியா சவாலை ஆரம்பித்து வைக்க விசேச முனைப்பை மேற்கொண்டார். அதே மாதிரியான பேரார்வம், ஊக்கம் மாநில அரசின் திட்டங்களான ‘ஹரிதா ஹாரம்’ (பச்சைத் தோட்டம்), ’கோடி விரிக்‌ஷார்ச்சனா’ ஆகியவற்றிலும் வெளிப்பட்டன.

திரைப்பட நடிகர், நடிகைகளிலிருந்து பல்வேறு துறைசார்ந்த பெரிய மனிதர்கள் வரை ஏராளமான மக்கள் இந்தப் பசுமை முனைப்புத் திட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது உற்சாகமான நிகழ்வாக விளங்குகிறது. ஆகப்பெரிய அளவில் நூற்றுக் கணக்கான நாற்றுக் கன்றுகளை நட்டுப் பசுமைச் சூழலைப் பரவலாக்குவது என்பது சொந்த லாபத்திற்காக மேற்கொள்ளும் குறுகிய அரசியல் விளம்பர தந்திரோபாயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு தவ வேள்வி; மாநிலத்தின் நீண்டகால நன்மைக்கு, நலனுக்கு இட்டுச் செல்லும் ஆக்கப்பூர்வமான செயல்; பொது சுகாதார மேன்மையை, சுற்றுச்சூழல் சமச்சீர்வைத் தூக்கிப் பிடிக்கும் தூய்மைத் திட்டம். நாற்றுக் கன்றுகளை அடர்ந்த, செழிப்பான மரங்களாக வளர்த்தெடுக்கும் கொள்கைகள், மானாவாரியாக மரங்களை வெட்டித் தள்ளுவதைத் தடுத்து நிறுத்தும் கொள்கைகள்தான் எங்கும் பசுமையை, எதிலும் பசுமையைக் கொண்டுவரும் தாரக மந்திரங்கள்.

ஹைதராபாத்திற்குக் கிடைத்திருக்கிற இந்த அபூர்வ அகில உலக அங்கீகாரம் எல்லா நகரங்களுக்கும், எல்லா மாநகரங்களுக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான, பசுமையை உருவாக்கும் போட்டியைக் கிளர்த்திட வேண்டும். குடிமைச் சமூகத்தின் சுறுசுறுப்பான, தன்முனைப்பான ஆர்வமான பங்களிப்புதான் பசுமையானதோர் இந்திய நாட்டைக் கட்டமைக்க முடியும்.

பசுமையைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஓர் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தைச் சுற்றுச் சூழல்வாதிகள் பல வருடங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சுற்றுச் சூழல்வாதிகளின் எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதால், மாசு என்னும் மாபெரும் அரக்கன் தனது கொடூரமான விஷப் பற்களை விரியக் காட்டி அச்சுறுத்துகிறான்.

வளி மண்டலத்தில் வலிந்து வந்து தங்கும் திட, திரவ மாசுப் பொருட்களால் (பர்டிக்குலேட் மேட்டர்) ஏற்படும் காற்று மாசினால் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, லக்னோ ஆகிய மாநகரங்களில் ஒருலட்சத்து இருபதினாயிரம் உயிர்கள் பலியாகி விட்டன என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அந்த ஆய்வை நடத்தியது கிரீன் பீஸ் (பசுமை சமாதானம்) என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசியா அமைப்பு. இந்த அமைப்பின் மதிப்பீட்டில், இந்த ஆறு மாநகரங்களில் மாசு ஏற்படுத்திய நோய்களைக் குணப்படுத்த ரூபாய் 1.3 லட்சத்து கோடி மருத்துவச் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் மாசு உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட 67 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது. சீனாவின் காடுவளர்ப்புத் திட்டம், வருடத்திற்கு 25 டன் கரியமில வாயுவைச் சுத்தம்செய்து, தினமும் 60 கிலோ பிராண வாயுவை விடுவிக்கும் அளவுக்குப் போதுமான பசுமைச் சூழலை உண்டாக்கி இருக்கிறது. களத்தில் அற்புதமான பலன்களைச் சாதித்து இருக்கிறது சீனாவின் காடுவளர்ப்புத் திட்டம். கோஸ்டா ரிக்கா என்னும் நாடு தனது பூகோளப் பகுதியில் 21 சதவீதத்திலிருந்து 52 சதவீதத்திற்குப் பசுமைச் சூழலை அதிகரித்திருக்கிறது. அதே போல், பிரேசிலும் தனது பூகோளப் பகுதியில் 60 சதவீதத்திற்குப் பசுமைச் சூழலை அதிகரித்திருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் ஆகப்பெரிய அளவுக்குப் பசுமையை மேம்படுத்தி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் உருவாக்கப் பட்ட தீவிரமான மக்கள் இயக்கங்கள்தான்.

மரங்கள் சுற்றுச்சூழலின் வெப்ப அளவைச் சமன்படுத்தி, நீரின் போக்கை ஒழுங்குப் படுத்துகின்றன. மனித குலத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தின் ஏறுபடிகள் மரங்கள்தான். சமூகக் காடுகளை மேம்படுத்த நினைக்கும் நிதி ஆயோக்கின் திட்டமும், பசுமை இந்தியாவைத் தொடங்கி வைக்க நினைக்கும் நடுவண் அரசின் உறுதியான தீர்மானமும் புனிதமான வெறும் வாய்ச் சொற்களாக கிடந்துவிடக் கூடாது; காகிதங்களில் முடங்கிவிடக் கூடாது. ஹைதராபாத் செய்திருக்கும் சாதனை எல்லா நகரங்களிலும், மாநகரங்களிலும் பசுமையை வளர்த்தெடுக்கும் பேரார்வத்தைத் தூண்டிவிடும் என்றால், பசுமை இந்தியா என்னும் கனிவான கனவை மெய்ப்பிக்க ஆரம்பிக்கும் நெடும் பயணத்தில் முன்னெடுத்து வைக்கின்ற முனைப்பானதோர் அடியாக மிளிரும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.