ETV Bharat / opinion

குற்ற புலனாய்வு நிறுவனமான சிபிஐயின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய ஒரு பார்வை

author img

By

Published : Aug 23, 2020, 8:11 PM IST

இந்திய மக்கள் இந்த அமைப்பின் மீது ஒருவித விருப்பு-வெறுப்பு பார்வையை கொண்டுள்ளனர். சட்டத்தின் ஒரு நிறுவனமாக பாரபட்சமின்றி, நடுநிலையாக செயல்படத் தவறுவதாக சிபிஐ பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது, ஆனால் அதே சமயம், செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதும் அதிகரித்து வருகிறது.

சிபிஐ
சிபிஐ

நாட்டையே உலுக்கிய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை தொடங்கியுள்ளதிலிருந்து, செய்திகளில் சிபிஐ முக்கியமாக இடம் பெறுகிறது

சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் என்.கே.சிங் ஈடிவி பாரத்-திடம் கூறுகையில், "சிபிஐ-யில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன, நான் சிபிஐயில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எந்த நிறுவனமும் முன்பு இருந்ததை போன்று இன்று இல்லை, எனவே சிபிஐ-யும் அதற்கு விலக்கில்லை. சிபிஐ மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சில சமயங்களில், அதன் செயல்பாடுகளில் தவறிவிட்டாலும், அதன் நல்ல செயல்பாட்டிற்கு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கு, மற்றும் இதுபோன்ற பல ஊழல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான வழக்குகளையும் நான் கையாண்டேன் ". என்று கூறினார்

இந்த முன்னாள் சிபிஐ அதிகாரி இந்திரா காந்தியை அக்டோபர் 2, 1977 அன்று கைது செய்தார், அந்த வழக்கு காரணமாக, முன்னாள் இந்தியப் பிரதமர் சிறைக்கு செல்ல நேர்ந்தது.

மேலும், "எந்தவொரு வழக்குகளையும் எடுத்துக்கொள்வதற்கு, அரசாங்கத்திடம் இருந்து சிபிஐ அனுமதி பெற வேண்டும் என்ற நிலை முன்னர் கிடையாது. இது தற்போது சிபிஐயின் சுதந்திரமான நடவடிக்கையில் ஒரு கறையை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் மக்களுக்கு சிபிஐ மீது நம்பிக்கை உள்ளது" என்று சிங் கூறினார்.

சிபிஐயின் செயல்பாட்டு முறையில் எந்தவொரு அரசியல் தலையீடும் உகந்ததல்ல. சிபிஐயை மேற்பார்வையிடவும், தேவையான உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருந்தாலும், சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு சாதகமாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய புலனாய்வுத் துறை என்பது ஊழல் முதல் கொலை வரையிலான வழக்குகளை விசாரிப்பதற்கான ஒரு இந்திய நிறுவனமாகும். இந்தியாவில் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு வரும்போதெல்லாம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற குரல் ஒலிப்பது என்பது எப்போதும் காணப்படுகிறது. சில அரசியல்வாதிகள் அல்லது பெரிய தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளோ அல்லது வங்கி மோசடி வழக்குகள் முதல் வன்புணர்வு வழக்குகள் வரை எதுவாக இருந்தாலும், சிபிஐ அனைத்தையும் விசாரிக்கிறது.

ஆனால் இந்த அமைப்பின் செயல்திறன், இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் அது கையாளும் வழக்குகள் காரணமாக, பெரிதும் பேசப்படவில்லை

சிபிஐ கையாண்ட வழக்குகளின் ஏற்ற இறக்கங்களைப் பார்ப்போம்.

சிபிஐ கையாண்ட சில பரபரப்பான வழக்குகள்:

ஸ்டெர்லிங் பயோடெக் ஊழல்

பிரபலமான ஸ்டெர்லிங் பயோடெக் ஊழல், வதோதராவைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் சந்தேசரா மற்றும் அவரது சகோதரர் சந்தேசரா ஆகிய இருவரும் ஆறு வங்கிகளில் ரூ .5,700 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சில நபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஸ்டெர்லிங் பயோடெக் 2011 ஜனவரி முதல் ஜூன் வரை பணம் கொடுத்த விவரங்கள் உள்ள சில நாட்குறிப்பைக் சிபிஐ கண்டறிந்தது. .

விஜய் மல்லையா வழக்கு: சிபிஐ விசாரித்த, மிகவும் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று இந்திய தொழிலதிபர் மற்றும் மதுபான அதிபர் விஜய் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு. பல வங்கிகளில் 9,000 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக கூறப்படும் மல்லையா 2016ல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பினார்.

ஹெலிகாப்டர் ஊழல்: சிபிஐ கையாண்ட மற்றொரு முக்கியமான வழக்கு ரூ .3,600 கோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு. இத்தாலிய நிறுவனமான ஃபின்மெக்கனிகாவால் தயாரிக்கப்பட்ட 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள, இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சாரதா நிதி மோசடி

சிபிஐ விசாரித்த மற்றொரு முக்கியமான வழக்கு, 2013ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்த சாரதா சிட்ஃபண்ட் மோசடி வழக்கு. 200 தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைகீழ் இயங்கும் நிறுவனமான சாரதா குழுமம், தனது முதலீட்டாளர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களை மோசடி முதலீட்டு திட்டங்கள் (போன்ஸி) மூலம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி, போன்ஸி திட்டங்களுக்கு உதவுவதில் பங்கு வகித்ததாக சிபிஐ, அதன் குற்றப்பத்திரிகையில் கூறியது.

சிபிஐ வழக்கில் சந்தித்த தோல்விகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்குகள் முதல் பரபரப்பான ஆருஷி கொலை வழக்கு போன்ற குற்றவியல் வழக்குகள் வரை, சிபிஐ விசாரணை நடத்திய விதம் குறித்து விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றமும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தின் போது சிபிஐ நான்கு வெவ்வேறு வழக்குகளில், பல லட்சம் பக்கங்கள் கூடிய ஆவணங்களுடன் மிகவும் பிரபலமான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. ஆனால் சிபிஐ-யால் ஒருவருக்கும் தண்டனை வாங்கி தர இயலவில்லை.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிபிஐ 2015 ஜனவரி 1 முதல் 2020 பிப்ரவரி 29 வரை 4,300 வழக்கமான வழக்குகள் மற்றும் 685 ஆரம்பகட்ட விசாரணைகள் உட்பட 4,985 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அரசாங்கப் பதிவின் படி, இந்த காலகட்டத்தில், சிபிஐ 4,717 வழக்குகளை (3987 வழக்கமான வழக்குகள் மற்றும் 730 ஆரம்பகட்ட விசாரணை) விசாரித்துள்ளது.

ஜனவரி 1, 2015 முதல், பிப்ரவரி 29, 2020 வரை, 3,700 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, சிபிஐயின் தண்டனை விகிதம் 65-70 விழுக்காடாக இருக்கிறது. இதனை உலகின் மிகச் சிறந்த விசாரணை நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கது என்றாலும் தற்கொலை வழக்குகளை சிபிஐ கையாளுவதற்கு போதுமானதாக இல்லை. இதுவரை அது கையாண்ட தற்கொலை வழக்குகளில் ஒன்றில் கூட தர்க்கரீதியான முடிவு கிடைக்கவில்லை.

சிபிஐ இதுவரை சில தற்கொலை வழக்குகளை விசாரித்திருந்தாலும், அவற்றில் எந்தவொரு வழக்கிலும் சந்தேககப்படும் நபர், இறந்தவரை தற்கொலை செய்ய தூண்டினார் என்பதை சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை.

உதாரணமாக, சுஷாந்த் வழக்கு தவிர, பாலிவுட் நடிகை ஜியா கான்ஸ் மரணம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது, அதில் சூரஜ் பஞ்சோலி என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தாலும், 2017 முதல் இந்த விசாரணையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து - ஆதரவு கொடுக்கும் சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.