ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்), பாஜக கூட்டணியிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேடி) தற்போதைய தலைவரான சிராக் பாஸ்வான் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளார். அவர் நிச்சயமாக தனது வேட்பாளர்களை நிதிஷ் குமாரின் கட்சிக்கு எதிராக நிறுத்துவார்.
ஏனெனில் தான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பட்டியலின வாக்குகள் பெருவாரியாக உள்ள பிகாரில், நிதிஷ் குமார் அம்மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு முன்னதாக எல்.ஜே.பி.யின் நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வான் நிதிஷ் குமாருக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதா தளத்துக்கு அவர் ஆதரவு கொடுத்தாலும், பட்டியலின மக்களின் வாக்குகளில் எல்.ஜே.பி. இன்றுவரை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கிடையில் நிதிஷ் குமார் சந்திக்கும் இரண்டாவது பிரச்னை, அங்கு அவரின் கட்சியில் பிரபலமான ராஜபுத்திர இனத்தை சேர்ந்த தலைவர்கள் யாரும் இல்லை. இதே பிரச்னை பாஜகவுக்கு இருக்கிறது.
பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 45 இடங்களில் ராஜபுத்திரர்கள் வாக்கு வங்கியாக உள்ளனர்.
ஆகவே ராஜபுத்திரர்களின் வாக்கு வங்கி நிதிஷ் குமார் பக்கம் எந்தளவுக்கு சாயும் என்பதை போக போகதான் பார்க்க முடியும். அடுத்து எதிர்க்கட்சிகள் மிக முக்கியமான பிரச்னையை உருவாக்கியுள்ளன.
அதாவது மத்திய அரசின் நிதி மாநிலத்துக்கு குறைந்துவருவது, வேலை வாய்ப்புகள் இல்லாதது மற்றும் தொழில்முடக்கம். இது தவிர குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
லாலு பிரசாத் யாதவ்வின் மகனும், பிகாரின் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஷ்வி யாதவ், மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு இன்மை விவகாரத்தை தனது அனைத்து பரப்புரையின் போதும் முன்வைக்கிறார்.
மாநிலத்தில் 46.6 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. மேலும் தாங்கள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் 10 லட்சம் நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
பிகார் மாநிலத்தை பொறுத்தவரை உணவகங்கள், சுற்றுலாத் துறையும் முடங்கி போய் உள்ளன. பல்வேறு பெரிய பெரிய உணவகங்கள் கூட மூடப்பட்டுள்ளன.
நிறைவாக, ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) மற்றும் முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) போன்ற சமூக அடிப்படையிலான கட்சிகளின் மகா ஜனநாயக மதசார்பற்ற கூட்டணி அமைத்துள்ளன.
இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் மத்திய மந்திரி தேவேந்திர பிரசாத்தின் சமாஜ்வாடி ஜனதா தளம், டாக்டர் சஞ்சய் சவுகானின் ஜனவாடி கட்சி (சோசலிஸ்ட்) மற்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹெல்தியோ பாரதிய சமாஜ் கட்சியும் ஜே.டி. (யு) ஆகியவையும் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினால், குர்மி சமூக மக்களின் வாக்குகள் இங்கு செல்லும். இது நிதிஷ் குமாருக்கு எதிராக மாறக்கூடும். எனினும் நிதிஷ் குமாருக்கு சாதகமான இரண்டு நிலைகளும் உள்ளன.
ஏனெனில் எதிர்க்கட்சி தலைவர்களான தேஜஷ்வி யாதவ் மற்றும் சிராக் பாஸ்வான் ஆகியோர் அனுபவம் இல்லாதவர்கள். இந்தக் காரணத்தை நிதிஷ் குமாரின் கட்சியினர் தங்களின் பரப்புரையின் போது முன்னிலைப்படுத்துகின்றனர்.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு சாதகமான இரண்டாவது விஷயம், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது. ஏனெனில் அவர் பரப்புரை களத்தில் இருக்க மாட்டார். இதேபோல் எல்.ஜே.பி. கட்சியிலும் நிறுவனத் தலைவரும் (ராம் விலாஸ் பாஸ்வான்) காலஞ்சென்றுவிட்டார்.!