இன்று உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்க்ரிப்-பாக்ஸ் என்னும் ஆய்வு நிறுவனம், ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 58 விழுக்காடு பெண்கள் தங்கள் பணத்தை நிலையான வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) அல்லது தங்கள் சேமிப்புக் கணக்கில் வைக்க விரும்புவதால், 'சேமிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டினாலும் அதில் சரியான திட்டமிடல் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆறு விழுக்காட்டினர் தங்கம் வாங்க விரும்புவதாகவும் அவர்களில் 15 விழுக்காட்டினர் தங்களது அதிகப்படியான வருமானத்தை முதலீடு செய்ய, 'மியூச்சுவல் ஃபண்ட்'டையே தேர்ந்தெடுப்பதாகவும் அந்நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளது.
தங்கம் பதுக்குபவர்கள் கவனத்துக்கு - மத்திய அரசு அதிரடி திட்டம்
இந்த ஆய்வானது, இரண்டு வாரங்களில் ஃபேஸ்புக் குழுக்களில் 400 பெண்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பங்கு பெண்கள் சேமிப்பதைப் பெரிதும் விரும்புகிறார்கள் என்று அவர்களின் கணக்கெடுப்பு சொல்கிறது.
இது குறித்து ஸ்க்ரிப்-பாக்ஸ் தலைமை செயல் அலுவலர் அசோக் குமார் கூறுகையில், "சேமிப்பதும் முதலீடு செய்வதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். அவை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொன்றும் வழங்குவதில் பெரிய வித்தியாசம் உள்ளது.
கேரளாவில் களைகட்டும் தெய்யம் கலாச்சார நடனத் திருவிழா!
சேமிப்பு என்பது குறைந்த அல்லது வருமான விகிதத்தை வழங்கும் அவசரநிலைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம். முதலீடு என்பது பணத்தைப் பெருக்குவதற்கான ஒரு முறையான செயல்பாடாகும். சந்தை சார்ந்த நிதி முகமைகளில் (எடுத்துக்காட்டு: மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்வது பணவீக்கத்தைச் சரிசெய்யவும், பல ஆண்டுகளாக உங்கள் நிகர மதிப்பை வளர்க்கவும் உதவும்" என்று கூறினார்.