ETV Bharat / lifestyle

இந்தியாவில் அதிகரித்துவரும் சிசேரியன் கலாசாரம்!

இந்தியாவில் உள்ள பணக்கார நகரங்களில், அறுவை சிகிச்சை முறைப்படியே அதிகப்படியான பிரசவம் நடப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

author img

By

Published : Mar 27, 2019, 5:54 PM IST

Updated : Mar 28, 2019, 7:30 AM IST

சிசேரியன்

இந்தியாவில் தற்போது அறுவை சிகிச்சை முறை அதிகரித்திருப்பது அனைத்து தரப்பு மக்களும் அறிந்த ஒன்று.

2015 - 2016ஆம்ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட பிரசவ முறைகள் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய சுகாதார மற்றும் குடும்பநல கருத்துக்கணிப்பின் முடிவில், இந்தியாவை அச்சுறுத்தும் இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்ததகவல்வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை நல்லது:

வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களும் வசித்துவருகின்றனர்.பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு கூடிய இந்த நாட்டில், அதிக பணம் படைத்தவர்களும் உண்டு ,வறுமையில் வாடுபவர்களும் உண்டு.

பணம் படைத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள், நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவம், அறுவை சிகிச்சை முறைப்படியே அதிகம் நடத்தப்படுவதாக தேசிய சுகாதார மற்றும் குடும்பநல கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 2005-2006ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பின் முடிவில் "சிசேரியன்" கலாசாரம் அதிகரித்துவருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது, 2010 முதல் 2016 வரையிலானஆறு ஆண்டுகளைஅடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், சுமார் 17.2 விழுக்காடு சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறைப்படியே இந்தியாவில் குழந்தைகள் பிறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வலி இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள சிசேரியன் முறையே சிறந்தது என்றும், நாம் விரும்பும்நல்ல நேரத்தில் குழந்தையை பிறக்க வைக்கலாம் என்றும் சில மருத்துவமனைஆசை காட்டிவருதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

இயற்கையை எப்போதும் அதன் போக்கில் செயல்படவிடுவது நம் கடமை. அதை மாற்றியமைக்க முயல்வது பெரும் வன்முறை.

மருத்துவ வசதிகள் வளர்ந்துவருவது ஒரு பக்கம் நன்மை என்றாலும், அவற்றை எப்போது எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடமேஉள்ளது.

இந்த மிகப்பெரிய பொறுப்பை சிலர் தவறாக பயன்படுத்தி, இயற்கை முறைக்கு முழுக்குப் போட முயலும் இத்தகைய செயல்கள் வருத்தத்திற்குரிய ஒன்றே.

போதிய மருத்துவ வசதி இல்லை:

அறுவை சிகிச்சை அதிகம் நடப்பதாக ஒரு பக்கம் கண்டறியப்படாலும், இன்னொரு பக்கம் போதிய மருத்துவ வசதி இல்லாமல் குழந்தைகள் இறப்பது, பிரசவ நேரத்தில் தாய்-சேய் இருவரும் இறப்பதுஎன பல்வேறு சம்பவங்கள் இதே நாட்டில் நடப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணம் அதிகம் வைத்திருக்காத ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 2.2 விழுக்காடு மட்டுமே அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடத்தப்பட்டிருப்பதாக இந்த கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் இந்திய சுகாதாரத்துறை மீதானசுமை மேலும் அதிகரித்துருப்பதுதெளிவாக தெரிகிறது.

இறுதியாக, இந்தியாவில் தற்போது நிலவிவரும் கலாசார மாற்றமும், பொருளாதார முன்னேற்றமும் அறுவை சிகிச்சை முறை பிரசவத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதை இந்த ஆய்வு தீர்க்கமாக வெளிப்படுத்துகிறது எனஆய்வாளர்கள்மற்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Last Updated : Mar 28, 2019, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.