இதுகுறித்து அறிந்து கொள்ள நமது ஈடிவி பாரத் குழு, ஜகதீஷா குழந்தை வழிகாட்டல் மற்றும் பாலூட்டுதல் மேலாண்மை மருத்துவமனை மருத்துவர் ஷாமா ஜகதீஸ் குல்கர்னியுடன் உரையாடியது.
தங்களது குழந்தைகளை ஊக்குவிக்க பெற்றோர் மெமரி டானிக்குகள், மல்டி விட்டமின் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்க முன்வருகின்றனர். ஆனால் மருத்துவர் ஷாமா உணவு ஊட்டச்சத்தே மிக முக்கியம் என தெரிவிக்கிறார்.
நாம் பிறந்த 1,000 நாள்களில் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகரித்து, மூளையின் வளர்ச்சி நடைபெறுகிறது. கர்ப்ப காலத்தில் அதாவது 280 நாள்களில் தாயின் ஊட்டச்சத்து குழந்தைக்கு மிக மிக முக்கியம். பிறந்த 1 முதல் 6 மாதங்களான குழந்தைக்கு தாய்ப்பால் இன்றியமையாததாகும். அதன் பிறகு வீட்டில் தயாரிக்கப்பட்ட மென்மையான உணவுகள் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் உண்ணும் குழந்தைகளுக்கு IQ (Intelligence Quotient) அதிகமிருக்கும்.
பிறந்து 1, 000 நாள்களான குழந்தை மீது நீங்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி உணவு கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு குழந்தையின் மூளை செயல்பாடு இருக்கும். இந்த நேரத்தில் அன்பு செலுத்தப்படும் குழந்தை அன்பாகவும், வெறுப்பு காட்டப்படும் குழந்தை வெறுப்பை காட்டுபவனாகவும், எதுவும் சொல்லி கொடுக்காத குழந்தை ஏதும் தெரியாதவனாய் தான் பிற்காலத்தில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் என்ன சொல்லிகொடுக்கிறீர்களோ குழந்தையும் அதுபோலத் தான் வளரும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உணவு முக்கியம். புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட உணவு ஊட்டச்சத்து மிக்க உணவு. காய்கறிகள், முளை கட்டிய பயிர்கள், பருப்பு வகைகள், தானியங்களை உணவில் முறையாக சேர்ப்பது குழந்தையின் உடல், மன வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை அதற்கு கொடுக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் ஆராய்ந்து, உணவின் சுவையை அறிந்து கொள்ளும்.
குழந்தை அதிக சுவை, வண்ணம் இருக்கும் உணவுகளை உட்கொள்ளும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளில் தாய்மார்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மஞ்சள் போன்ற இந்திய உணவுகள் காயத்தை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ராகி, தினை வகைகள் கால்சியத்தையும், முளை கட்டிய பயிர்கள், பருப்பு வகைகள் புரதங்களையும் வழங்குகின்றன. பழங்கள் வைட்டமின் சி போன்ற வெவ்வேறு வைட்டமின்களை வழங்குகின்றன. இயற்கையான உணவுகளுடன் ஒப்பிடும் போது பொட்டலம் கட்டப்பட்ட உணவுகள் குழந்தைகளுக்கு அதிக புரதங்களை அளிக்கிறது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. இட்லி, உப்மா, முளை கட்டிய பயிர்கள் கொண்ட தோசை, காய்கறிகள் ஆகியவற்றை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
சில முக்கிய குறிப்புகள்:
டிஹெச்ஏ (DHA)- ஏப்ரிக்கோட், மீன்கள் ஆகியவற்றில் அதிகமிருக்கும்.
இரும்புச்சத்து- வெள்ளம், பேரிச்சம் பழம், இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவுகளில் காணப்படும்.
பாலிஷ் செய்யப்படாத பருப்புகள், தானியங்களில் மூளை வலுப்படுத்தும் தன்மை உள்ளது.
இதுபோன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அறிந்து அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவுடனும் வளர்கிறது.
இதையும் படிங்க... பீட்ரூட்டில் இவ்வளவு நன்மைகளா?