ETV Bharat / lifestyle

'லாம்ப்டா' கரோனா வகையில் இது புதுசு! - லாம்ப்டா வகை கொரோனா

’பெரு’ நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய கரோனா வைரஸுக்கு 'லாம்ப்டா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லாம்ப்டா வகை கொரோனா
லாம்ப்டா வகை கொரோனா
author img

By

Published : Jun 20, 2021, 10:14 AM IST

டெல்லி: லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாறிய கரோனா நோய்க் கிருமி பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு, “லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கரோனா நோய்க் கிருமி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது. இந்த வகையான நோய்க் கிருமி 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.

குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை பரவியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த நோய்க் கிருமியின் தாக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

'கரோனா 3ஆம் அலையால் குழந்தைகளுக்குப் பாதிப்பு இருக்காது'

உருமாறிய கரோனா வைரஸ்களை, கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கரோனா வகைகளுக்கு பெயரை வெளியிட்டு வருகிறது.

லாம்ப்டா வகை கொரோனா
delete this text

இந்த நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாறிய கரோனா நோய்க் கிருமிக்கு 'லாம்ப்டா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வகைக்கு 'டெல்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.