ETV Bharat / lifestyle

மிக மோசமான நிலையில் நீர் ஆதாரம்! - ரசாயனங்கள் நீரில் கலத்தல்

உலகிலேயே மோசமாகப் பராமரிக்கப்படும் மிகச் சிறந்த சொத்து எது தெரியுமா, தண்ணீர்தான்!

நீர்
நீர்
author img

By

Published : Dec 30, 2020, 8:23 AM IST

தண்ணீர் மாசுபாடு எதனால்?

நிலத்தடி நீர், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்து நிலைகளிலும் உள்ள நீர் மிக மோசமாக பராமரிக்கப்படுவதுடன், மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் கடுமையாக மாசுபட்டுள்ளன. ஏற்கனவே 60 விழுக்காடு நீர் ஆதாரம் கெட்டுப் போய்விட்டதாகவும், இதே நிலைமை தொடர்ந்தால் வரும் 2050-க்குள் பாதுகாப்பான நீர் என்பதே இல்லாத சூழல் உருவாகி, நாம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ரசாயனங்கள் நீரில் கலத்தல்

கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள், ஆறுகள், குளங்கள், கடல் உள்பட நீர் ஆதாரங்களில் கலப்பதால் மிகப் பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கத் தொடங்கிவிட்டோம்.

சமீபத்தில் ஆந்திராவில் எலுரு பகுதியில் ஏற்பட்ட உடல் உபாதைக்கு காரணம், மாசுபட்ட தண்ணீர்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீரில் ஆர்கனோ குளோரின் மருந்துகள், மெர்குரி, நிக்கல், லீட் போன்ற வேதிப்பொருள்கள் குறிப்பிட்ட அளவைவிட அதிகளவு கலந்துள்ளதாக, ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீரில் மாசுபாடு குறித்து ஆய்வு

2013ஆம் ஆண்டு ஓஷன் இன்டெக்ஸ் ஹெல்த் அமைப்பினர் 177 நாடுகளில் மிகப்பெரிய ஆய்வுகளை நடத்தினர். உலக அளவில் கடல்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அங்கு நீர் பாதுகாப்புத் தன்மை அதிகளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 160 இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.

நகரமயமாக்கல், தொழிற்சாலைமயமாக்கல், வேளாண் ரசாயன தொழிற்சாலைகள், உற்பத்திக்கூடங்களின் கழிவுகள் உள்பட பல்வேறு காரணங்களால், நம் நாட்டில் நீர்நிலைகள் மிகக் கடுமையான அளவில் மாசுபட்டுள்ளன.

நீரில் வாழும் உயிரினங்கள் அழிவு

கடல் பகுதிகள் மட்டுமின்றி, பண்ணைகளிலும் மீன்கள் அதிகளவில் செத்து மிதப்பது சமீப காலங்களில் வாடிக்கையாகிவிட்டது. மீன்கள் மட்டுமின்றி அதிக அளவு ரசாயன உரங்கள், இன்னபிற வேதிப்பொருள்களால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் வாழ் விலங்குகளோடு சேர்ந்து பறவைகளும் பெரியளவில் அழிந்துவருகின்றன. இதுமட்டுமின்றி நத்தைகள், அட்டைகள், மண்புழுக்கள் மிக வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் சேர்ந்துள்ளன.

ரசாயனத்தால் உணவிலும் நச்சுத்தன்மை

ரசாயனங்களின் பரவலால் பெரும்பாலான ஆறுகள் நச்சுத் தன்மை வாய்ந்தவையாக மெள்ள மெள்ள மாறிவருகின்றன.

இந்தத் தண்ணீரை வேளாண்மைக்கு பயன்படுத்தும்போது, நமது உணவும் நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவருவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு நகரங்கள், கிராமங்களில் இன்றளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் ஏராளமான கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. இவை மட்டுமின்றி, ஆற்றங்கரைகளில் பிளாஸ்டிக் கவர்கள் உள்பட பல்வேறு மக்காத குப்பைகளை கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது.

பூமியின் இயற்கை சுழற்சி

நமது பூமிக்கு ஒரு அற்புத சக்தி உள்ளது. இயற்கையாக உருவாகும் கழிவுகளையும், மக்கும் கழிவுகளையும் சுத்திகரித்து மீண்டும் நமக்கு சுத்தமான குடிநீரை மண் மூலம் அளிக்கும். ஆனால் இந்தச் சுழற்சியை வேரறுக்கும் விதமாக, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், மக்காத குப்பைகள், வேதிப் பொருள்கள் கலக்கப்பட்டு நீரை நிரந்தரமாக மாசுபடுத்தி வருகின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருவர் 135 முதல் 150 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி பயன்படுத்துபவர்கள் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிப்பது அரிதிலும் அரிது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு அறிக்கை

இப்படி தண்ணீரை மாசுபடுத்துவதில் தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி தனி மனிதருக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 7,500 டன்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 18 ஆயிரத்து 200 டன் பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் ஆறுகளிலும் கடலிலும் கலக்கப்படுகிறது. இப்படி கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் 450 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நச்சுத்தன்மை உடைய வாயுக்களை வெளிப்படுத்தும். இதன்மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள மண், காற்று, நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

நீராதாரம் மாசுபடுவதைத் தடுப்பதற்காக இந்தியாவில் 1974 வருடம் நீர் மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, ஆபத்தான கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் சட்டம் 1989, ஆபத்து நிறைந்த இரசாயனங்களை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் இறக்குமதி செய்தல் கட்டுப்பாட்டு சட்டம் 1989,வன பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 ஆகிய சட்டங்கள் அனைத்தும், நீர் மாசுபடுவதை கடுமையாக தடுக்கும் பொருட்டு பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன.

ஆனாலும் இன்றளவும் உலகளவில் ஏராளமான மக்கள் மாசுபட்ட குடிநீரையே அருந்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் மாசுபட்ட குடிநீர் அருந்தி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுதோறும் காலரா, டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கால் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன இவற்றுக்கெல்லாம் காரணம் மாசுபட்ட குடிநீர் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதில் வேதனையான உண்மை என்னவென்றால் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் தான் இதையெல்லாம் காணும் போது, இப்போதுள்ள சட்டங்களில் மிகக்கடுமையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து பராமரிப்பதில், அனைத்து தரப்பினரும் எவ்வாறு தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என்ற படிப்பினையை அளிக்க வேண்டும். இல்லையேல் இன்னும் சில ஆண்டுகளில் குடிப்பதற்கு மட்டுமல்ல வேறு எதற்கும் நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்!

இதையும் படிங்க: அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு: மாற்றுத்திறனாளிகளுக்கு 20% கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.