நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. உதாரணமாக கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்ட பானகத்தை அதிகம் குடிப்பார்கள். இதனால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா? பழரசத்தை விட வெயிலுக்கு உகந்தது பானகம்தான்.
கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானரகம்.
வெயிலுக்கு பானகம் அருந்தும்போது உடனடி சக்தி நமது உடலுக்குக் கிடைக்கிறது. நடைபயணம் போகும்போதும் களைப்பாக வீடு வந்தடையும்போதும் நாம் அருந்தும்பானகமானது உடலுக்குத் தேவையான சக்தியைத் தரம்.
கால்சியத்தை சுக்கிலிருந்தும்,இரும்புச்சத்து, அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,உணவுக் குழலில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்ய ஏலக்காயும், எலுமிச்சை பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைத்தன்மையை உருவாக்குவதும், அதைப்பற்றித் தரவுகளும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
![summer special Panagaram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2791607_panagaram.jpg)
புளியிலிருக்கும் வைட்டமின் 'சி'யானது பனைவெல்லத்துடன் வினைபுரிந்து உடனடி எனர்ஜியை உடலுக்கு அளிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபைப் போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம்.
அதன்மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய்த் தொற்றுகளை தவிர்ப்போம்.இதன்மூலம் உடலுக்கு நோய்களை உற்பத்தி செய்யும்பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை தவிர்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
- பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
- சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
செய்முறை:
1. வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.
2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் வடிகட்டவும்.
3. இதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.
4. மிளகு, சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டையும், களைப்பையும்பானகம் பருகிஓட ஓட விரட்டுங்கள்.