ETV Bharat / lifestyle

கரோனாவை எதிர்க்கும் உணவுகள் இவைதானாம்!- பரிந்துரைக்கப்படும் உணவுகள் - foods which increase immune system

கரோனா தொற்று காலத்தில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள் குறித்து பார்க்கலாம் வாங்க...

foods which increase immune system during corona pandemic

author img

By

Published : Aug 4, 2020, 11:53 AM IST

கரோனா தொற்று காலத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடு சத்தான ஆகாரங்களை உண்பதும் மிக அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபரால் மட்டுமே கரோனாவை எதிர்த்து போராடி வெல்ல முடியும். குறிப்பாக கரோனா அசுர வேகத்தில் பரவி வரும் இதுபோன்ற நாள்களில் உடல்நலனை காப்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியது முக்கியம்.

நீங்கள் உண்ணும் உணவு, குடிக்கும் பானம் ஒவ்வொன்றும் உங்கள் உடலின் ஊட்டச்சத்தை தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றிவருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்றவை கரோனா தொற்று காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பரிந்துரைகள் செய்துள்ளன.

கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

உடலின் செயல்பாடு நாம் எவ்வளவு சத்தான ஆகாரங்களை உட்கொள்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது. உடலில் சக்தி (energy) இருந்தால் மட்டுமே நம்மால் ஆற்றலுடன் வேலை செய்யமுடியும். அதற்கு கலோரிகளின் பங்கு மிக முக்கியம். கலோரிகள் அதிகம் உள்ள உணவுகள், குறிப்பாக அரிசி சோறு, ப்ரெட், முழு தானியங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவில் சிறிது அதிகமாக சேர்த்துகொள்ளுங்கள். துரித உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.

foods which increase immune system during corona pandemic
பழங்கள், காய்கறிகள்

புரதச்சத்து மிக முக்கியம் பாஸ்:

புரதச்சத்து மிக்க உணவுகளான முழு தானியங்கள், பயறு வகைகள், பால் உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் யாவும் உங்களுக்கு புரதச் சத்தை அள்ளி அள்ளி கொடுக்கும். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அசைவ விரும்பிகளாக இருந்தால் முட்டை, மீன், கோழிக் கறி போன்ற மாமிச உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பழம், காய்கறிகள்:

பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நார்ச்சத்து, விட்டமின்கள், உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) உள்ளன.

கலர் கலராக இருக்கும் காய்கறிகள், பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். அதனால், வாழை, ஆப்பிள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

கலோரிகள் கொண்ட உணவுகள்

நீர்சத்து:

நீர்சத்து இல்லாத உடல் வெறும் சக்கைதான். உடலுக்கு நீர்சத்து எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஏனென்றால் தொற்று தாக்குதல் உடலின் நீர்சத்தை குன்றச்செய்யும். தொற்றில் இருந்து குணமாகி வருபவர்கள் தங்கள் நீர்சத்தை தக்கவைத்துகொள்வது அவசியம். போதுமான நீர்சத்து இல்லாத காரணத்தால் உடலுக்கு பல வியாதிகள் வந்து சேரும்.

உடலுக்கு நீர்சத்தை அளிக்க அதிகமாக நீரை பருகுங்கள். அது உடல் அழகையும் கூட்டித்தரும். சூப், பழச்சாறு போன்றவை அதிக சக்தியையும் நீர்சத்தையும் தரும்.

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகள்:

இதுதான் மிக முக்கியமான பாயிண்ட். இம்யூன் பூஸ்டர் என்று சொல்லக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளில் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. இவை உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை பாதுகாக்கும்.

ஏனெனில் இவற்றில் பைட்டோகெமிக்கல் (phytochemicals), பயோ ஆக்டிவ் சேர்மங்கள் ( bioactive compound ) உள்ளன. மஞ்சள் இட்ட பால், கிரீன் டீ போன்றவற்றையும் உங்கள் உணவு லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதையும் படிங்க... ஒருபுறம் உணவுத் தட்டுப்பாடு - மறுபுறம் வீணான 100 குவிண்டால் தானியங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.