ETV Bharat / lifestyle

வீட்டைவிட்டு வெளியே வராமல் போன் வாங்கலாம் - விவோவின் புதிய திட்டம் - விவோ ஸ்மார்ட்போன்

டெல்லி: ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் ஸ்மார்ட் போனை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு புதிய திட்டம் ஒன்றை விவோ அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo
Vivo
author img

By

Published : May 5, 2020, 12:34 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களிலுள்ள மாவட்டங்களில் சில நிபந்தனைகளுடன் கடைகள் செயல்படலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே வராமல் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை வாங்க ஏதுவாக புதிய திட்டம் ஒன்றை விவோ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த மாதிரியான ஸ்மார்ட்போன்கள் தேவை என்பதை எஸ்எம்எஸ் வாயிலாகவோ, விவோவின் இணையதளத்திலோ பேஸ்புக் பக்கத்திலோ விவோவுக்கு தெரியப்படுத்தலாம்.

அதைத்தொடர்ந்து விவோவின் விற்பனை அலுவலர்களில் ஒருவர் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வாடிக்கையாளருக்கு உதவுவார். பின் விவோவின் 20 ஆயிரம் விற்பனையாளர்களில் ஒருவரிடமிருந்து வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட்போன் அனுப்பப்படும் என்று விவோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்எம்எஸ் சேவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாகவும் இணையம் மற்றும் சமூக வலைதள சேவைகள் மே 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் விவோ அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் Brand Strategy இயக்குநர் நிபூன் மரியா கூறுகையில், "இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களை இணையத்தில் வாங்க விரும்புவதில்லை.

அவர்களுக்காகத்தான் தற்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வீட்டைவிட்டு வெளியே வர விரும்பாதவர்களுக்கு மட்டுமே. கடைகளுக்குச் சென்று வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல கடைகளில் தங்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம்" என்றார்.

உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறித்து அவர் பேசுகையில், "அரசு உத்தரவு காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இருப்பினும் எங்களிடம் தற்போது ஸ்மார்ட்போன்கள் கையிருப்பு உள்ளது.

இப்போதுதான் விற்பனையை மெல்லத் தொடங்கியுள்ளோம். மக்களின் தேவையைப் பொறுத்தே எங்கள் கையிருப்பு எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பது தெரியவரும்" என்றார்.

மேலும், ஸ்மார்ட்போன் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது குறித்து அரசின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் நிபூன் மரியா தெரிவித்தார்.

இதையும் படிங்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.