சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): பெரும்பாலான ஐபோன் பயனர்களும், ஐபேட் பயனர்களும் புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்த பிறகு, தங்களுக்கு மின்கல சேமிப்புத் திறன் மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பயனர்கள் ரெட்டிட், ஆப்பிள் ஃபோரம் ஆகியவற்றில் பதிவுளை இட்டவண்ணம் உள்ளனர். வெறும் 30 நிமிடங்களில், 50 விழுக்காடு மின்கலத் திறனில் இழப்பு ஏற்பட்டதாக பெரும்பாலான பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2020, ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் ஆகிய தகவல் சாதனங்களுக்கு ஐஓஎஸ் 14.2 என்னும் புதிய பதிப்பை வெளியிட்டது. இதனைப் பதிவிறக்கம்செய்து, தங்களின் தகவல் சாதனங்களில் நிறுவிய பயனர்கள், பெரும் மின்கலச் சேமிப்பு பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக இது குறித்த குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு, தீர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.
-
iOS 14.2 Reportedly Causing Severe Battery Drain https://t.co/R5FKfOD1An by @hartleycharlton pic.twitter.com/002mTVomHk
— MacRumors.com (@MacRumors) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">iOS 14.2 Reportedly Causing Severe Battery Drain https://t.co/R5FKfOD1An by @hartleycharlton pic.twitter.com/002mTVomHk
— MacRumors.com (@MacRumors) December 6, 2020iOS 14.2 Reportedly Causing Severe Battery Drain https://t.co/R5FKfOD1An by @hartleycharlton pic.twitter.com/002mTVomHk
— MacRumors.com (@MacRumors) December 6, 2020
முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் மின்கலச் சேமிப்புத் திறன் பிரச்சினை எழவே, குறிப்பிட்ட கைப்பேசிகளுக்கு ஆப்பிள் நிறுவனம், அதற்கான மாற்றை வழங்கியது குறிப்பிடத்தக்கது.