சாம்சங் கேலக்ஸி A30 என்ற ஸ்மார்ட்போன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. சுமார் 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. இதற்கு அடுத்த மாடலான சாம்சங் கேலக்ஸி A31 ஸ்மார்ட்போனை, இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட சாம்சங் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்று காரணமாக வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே போனது.
இறுதியில் ஒரு வழியாக கடந்த வியாழக்கிழமை சாம்சங் நிறுவனம், நான்கு கேமரா, 5000mah பேட்டரியுடன் கேலக்ஸி A31 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A31 - சிறப்பம்சங்கள்
- 6.40 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ P65 பிராசஸர்
- இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார்
- பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 20 மெகாபிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி
- பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் வசதி
- ஆண்ட்ராய்டு 10-ஐ மையாகக் கொண்டு இயங்கும் சாம்சங்கின் One UI 2.o இயங்குதளம்
6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
The #Awesome new #GalaxyA31 is here. With an Awesome 48 MP Quad Camera, an Awesome 6.21cm (6.4”) Infinity-U Display, and a long lasting 5000mAh battery life, the Galaxy A31 is the smartphone you’ve been waiting for. #Samsung. Know More: https://t.co/IU5CToDaQD pic.twitter.com/sFZffo2KOL
— Samsung India (@SamsungIndia) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The #Awesome new #GalaxyA31 is here. With an Awesome 48 MP Quad Camera, an Awesome 6.21cm (6.4”) Infinity-U Display, and a long lasting 5000mAh battery life, the Galaxy A31 is the smartphone you’ve been waiting for. #Samsung. Know More: https://t.co/IU5CToDaQD pic.twitter.com/sFZffo2KOL
— Samsung India (@SamsungIndia) June 5, 2020The #Awesome new #GalaxyA31 is here. With an Awesome 48 MP Quad Camera, an Awesome 6.21cm (6.4”) Infinity-U Display, and a long lasting 5000mAh battery life, the Galaxy A31 is the smartphone you’ve been waiting for. #Samsung. Know More: https://t.co/IU5CToDaQD pic.twitter.com/sFZffo2KOL
— Samsung India (@SamsungIndia) June 5, 2020
அமேசான், பிளிப்கார்ட், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2