ETV Bharat / lifestyle

ஜியோ நெட்வொர்க்கில் சிக்கல்... புலம்பும் பயனர்கள்...

ஜியோ நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனம் பின்வருமாறு பதிலளித்துள்ளது.

author img

By

Published : Oct 6, 2021, 3:03 PM IST

Reliance Jio users
Reliance Jio users

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், கால் வசதி, இணைய சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதில் சிலர் ஜியோ நிறுவன ட்விட்டர் கணக்கை டேக் செய்து குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பான #jiodown என்ற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. இதில் ஒரு பயனாளருக்கு பதிலளித்த ஜியோ நிறுவனம் “உங்கள் இருப்பிடத்தில் இணையச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கள் தொழில்நுட்பக்குழு இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் சேவைகள் மீட்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் ஒட்டுமொத்த 42 கோடி பயனர்கள் இணந்துள்ளனர். முன்னதாக, அக். 4ஆம் தேதி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இதையடுத்து அக். 5ஆம் தேதி அதிகாலை முதல் செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.