2014 டிசம்பரில் ஒன்பிளஸ் ஒன் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த சீனாவை சேர்ந்த நிறுவனம் இதுவரை 13 ஸ்மார்ட்போன் மாடல்களை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்பிளஸ் 7 புரோ 5 ஜி மாடலை உலக சந்தையில் வெளியிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா மொபைல் காங்கிரஸில் (IMC) காட்சிப்படுத்தப்பட்டது. தனது 5 ஜி கைப்பேசியை நாட்டில் அறிமுகப்படுத்தும் திட்டங்களைத் தவிர, தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவும் ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது.
புதுடில்லியில் நடந்த ஒரு உரையாடலில் ஒன்பிளஸ் இந்தியா பொது மேலாளர் விகாஸ் அகர்வால் பேசும்போது, ''5 ஜி சாதனங்கள் தயாராக உள்ளன. வணிக ரீதியான வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நாங்கள் முன்னோடியாக இருக்க முயற்சிக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே நாட்டின் அனைத்து முன்னணி சுற்றுச்சூழல் அமைப்பில் 5 ஜி ஸ்மார்ட் ஃபோன்களை சோதித்து வருகிறோம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "எங்களிடம் அந்த விவரங்கள் கிடைத்ததும், எங்கள் 5 ஜி தயாரிப்புகளை வெளியிடுவோம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவோம் என்று நம்புகிறோம்" என விகாஸ் அகர்வால் கூறினார்.
இந்த ஆண்டு ஐ.எம்.சி.யில், எல்ஜி, ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் 5 ஜி தொழில்நுட்பம் கொண்ட ஒரே நிறுவனம் ஒன்பிளஸ் ஆகும்.
'5 ஜி தொழில்நுட்பத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் கடந்த ஒரு வருடமாக சோதனை செய்து வருகிறோம்' என அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: Huawei Mate XS: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மார்ச் 2020-ல் அறிமுகம்