ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.
வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.
- 6.65 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர்
- பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி IMX856 கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
- ஆண்டிராய்டு 9 pie இயங்குதளம்
- கொரில்லா கிளாஸ் வசதி
- 5000mah பேட்டரி
- 27w fast charge வசதி
கேம்கள் விளையாடும்போது மொபைல் சூடாகாமல் தடுக்க liquid cooling வசதியையும் பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட Nubia Red Magic 3S ரூ. 35,999க்கும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் ரூ. 47,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொபைல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: உங்க ரெட்மி மொபைலுக்கு MIUI 11 அப்டேட் எப்போ?