சர்வதேச அளவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் பெரும்பாலான தொழில்துறைகளை முடக்கியுள்ளன. குறிப்பாக, பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீனாவில் உருவாக்கப்படுகின்றன. வைரஸ் தொற்றால் சீனா முடங்கியபோது, ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேஜெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியீடுகளை முன்னணி நிறுவனங்களும் தள்ளிப்போட்டன.
தற்போது சீனாவில் இயல்புநிலை திரும்பிக்கொண்டிருப்பதால் புதிய ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. அதன்படி கடந்த வாரம் ஆப்பிள், ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன. இந்தப் பட்டியலில் இப்போது மோட்டோரோலா நிறுவனமும் இணைந்துள்ளது.
லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பில் இருந்த மோட்டோரோலா எட்ஜ் மற்றும் மோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போன்களை நேற்று (ஏப்ரல் 22) வெளியிட்டன.
மோட்டோரோலா எட்ஜ் அம்சங்கள்
- 6.70 இன்ச் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்
- பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 25 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
- 90Hz refresh rate
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 4,500mah பேட்டரி
- அதிவேகமாக சார்ஜ் செய்ய 18W டர்போபவர் சார்ஜிங் வசதி
-
It’s coming—our boldest, loudest, fastest smartphone, ever. Experience the Motorola Flagship Launch E-vent, Wednesday, April 22nd, 11AM CDT. Join us at https://t.co/IsVr50syBx pic.twitter.com/TzcERg3kDy
— Motorola (@Moto) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s coming—our boldest, loudest, fastest smartphone, ever. Experience the Motorola Flagship Launch E-vent, Wednesday, April 22nd, 11AM CDT. Join us at https://t.co/IsVr50syBx pic.twitter.com/TzcERg3kDy
— Motorola (@Moto) April 21, 2020It’s coming—our boldest, loudest, fastest smartphone, ever. Experience the Motorola Flagship Launch E-vent, Wednesday, April 22nd, 11AM CDT. Join us at https://t.co/IsVr50syBx pic.twitter.com/TzcERg3kDy
— Motorola (@Moto) April 21, 2020
மோட்டோரோலா எட்ஜ்+ அம்சங்கள்
- 6.70 இன்ச் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- பின்புறம் 108 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 25 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
- 90Hz refresh rate
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 5,000mah பேட்டரி
- அதிவேகமாக சார்ஜ் செய்ய 18W டர்போபவர் சார்ஜிங் வசதி
மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை 699 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 58 ஆயிரம் ரூபாய்) என்றும் மோட்டோரோலா எட்ஜ்+ 999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 76 ஆயிரம் ரூபாய்) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போன் மே 14ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகவும் மோட்டோரோலா அறிவித்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனும் மே மாதம் விற்பனைக்கு வரும் என்றாலும் குறிப்பிட்ட தேதியை மோட்டோரோலா இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மோட்டோரோலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒன்பிளஸ் 8இன் விலை இவ்வளவுதானா?