குருகிராம் (ஹரியானா): இந்திய தகவல் சாதன தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது ‘இன்’ ரக கைப்பேசித் தொகுப்புகளை இந்திய பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது.
‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற திரைப்பட வசனத்திற்கேற்ப, தங்கள் பயனர்களுக்காக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஃபீனிக்ஸ் பறவைபோல, தனது ‘இன்’ தொகுப்பு கைப்பேசிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்ன சிறப்பம்சங்களை இந்தக் கைப்பேசிகள் கொண்டுள்ளது எனப் பலர் மனத்திலும் கேள்வி எழலாம்.
சிறப்பம்சங்கள் என்பதைவிட, விலைக்கேற்ப பயனர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தங்களிம் ‘இன்’ தொகுப்பு கைப்பேசிகளில் உட்புகுத்தி கட்டமைத்துள்ளது. நவம்பர் 24ஆம் தேதி முதல் நிறுவனம் வெளியிட்டுள்ள நடுத்தர பயனர்கள் கைப்பேசியான ‘இன் நோட் 1' ஃபிளிப்கார்ட் தளத்திலும், மைக்ரோமேக்ஸ் இணையதளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
மைக்ரோமேக்ஸ் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.
ஆப்பிள் ஐபோன் கைப்பேசிகளில் பயன்படுத்தும் ஓலியோஃபோபிக் கோட்டிங் (எப்போதும் திரை தெளிவாக இருக்கும் / கைரேகைகள் பதியாது)
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1
- முழு அளவு எச்.டி+ தொடுதிரை (20:9) 16.7 மில்லியன் நிறங்களுடன்
- கேமர் தர கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மீடியாடெக் ஜி85, 2.0Ghz சிப்செட்
- 4ஜி அலைவரிசை கொண்ட இரட்டை சிம் வசதி
- வெகுசில கைப்பேசிகளில் வரும் அதிதிறன் கொண்ட 5000mAh லித்தியம் பாலிமர் மின்கல சேமிப்பு
- 18வாட் அதிவிரைவு மின்னூக்கும் திறன்
- ரிவர்ஸ் சார்ஜிங் வசதி (இந்த கைப்பேசியைக் கொண்டு பிற தகவல் சாதங்களை மின்னூட்டலாம்)
- ஆப்பிள் ஐபோன் கைப்பேசிகளில் பயன்படுத்தும் ஓலியோஃபோபிக் கோட்டிங் (எப்போதும் திரை தெளிவாக இருக்கும் / கைரேகைகள் பதியாது)
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்களை விளக்கும் படங்கள்
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 விலை
- 4 + 64ஜிபி : ரூ. 10,999
- 4 + 128ஜிபி : ரூ. 12,499