ETV Bharat / lifestyle

#MiMIXAlpha : ‘பட்டனும் இல்லை, பிடிக்க இடமும் இல்லை’ - அதிரடி காட்டும் மீ மிக்ஸ்! - மீ .ஸ்மார்ட்போன்

தொழில்நுட்ப சாதனங்கள் தயாரித்து கொடிகட்டிப் பறந்த நிறுவனங்களை தங்கள் பிரத்யேக தயாரிப்புகள் மூலம் அடக்கிய சியோமி, தற்போது அதன் முழு அளவு திரை கொண்ட ‘மீ மிக்ஸ் ஆல்ஃபா’ கான்செப்ட் கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

Mi MIX Alpha Specifications
author img

By

Published : Oct 3, 2019, 10:41 AM IST

Updated : Oct 3, 2019, 12:19 PM IST

நோக்கியா தனது தகவல் சாதனங்களை சராசரி மக்கள் மனதில் பதியவைக்க பலகட்ட போராட்டங்கள் நடத்தியதை 90’ஸ் கிட்ஸ்கள் அறிவார்கள். ஒரு புதிய தொழில்நுட்பத்தைச் சந்தைப்படுத்த அவ்வளவு சிரமங்கள் சந்தித்த காலகட்டம் அது. அப்படிப்பட்ட காலம் மக்களின் மனதிலிருந்து மறை(ற)ந்தும் போனது. இதற்கு காரணம் நாளொரு புதிய தொழில்நுட்பம், சந்தைக்கு அறிமுகமாவதுதான்.

#MiMIXAlpha : ‘பொத்தானும் இல்லை, பிடிக்க இடமும் இல்லை’ - மீ வெளியிடும் வெறித்தனமான ஸ்மார்ட்ஃபோன்!

டெக் சந்தையில் தங்களுக்கென தனி தடத்தை ஆழ்ந்து பதித்து வைத்திருந்த சாம்சங், நோக்கியா, சோனி எரிக்சன் நிறுவனங்கள், தங்கள் தகவல் சாதனங்களின் விலையில் எந்தச் சமரசமும் செய்யாமல் வெளியிட்டுவந்தது.

இந்நிலையில்தான், சியோமி தனது படைப்புகளை இந்தியச் சந்தைக்குள் கொண்டு வந்தது. ‘ஒரு விலைக்குப் பொருள் வாங்குகிறோம் என்றால், அந்த விலைக்கான அம்சங்களை நாம் எதிர்பார்ப்போம்’ - இந்த மந்திரத்தை சியோமி நிறுவனம் உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டது.

Mi MIX Alpha  Full Screen Display  new technology  new mobile launch  upcoming mobiles  best mobiles in 2019  xiaomi upcoming mobiles  Mi MIX Alpha feautres  Mi MIX Alpha specifications  சியோமி நிறுவனம்  மீ .ஸ்மார்ட்போன்  #MiMIXAlpha
Mi MIX Alpha Specifications

இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்ஃபோன்களுடன் சேர்த்துப் பல தகவல் ஸ்மார்ட் சாதனங்களை வெளியிட்டு வெற்றித்தடம் பதித்தது சியோமி. இந்நிலையில், தனது ஸ்மார்ட்ஃபோன் ரகமான மீ மிக்ஸ் வரிசையில் ‘மீ மிக்ஸ் ஆல்ஃபா’ (Mi MIX Alpha) என்ற கான்செப்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. முழு அளவு திரை, பொத்தான்கள் இல்லை, 108 எம்பி மெகாபிக்சல் படக்கருவி, திரை உணர்விகள் (Screen Sensors), ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை எனப் பல பிரமிப்பூட்டும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்த கான்செப்ட் ஸ்மார்ட்ஃபோன் வெளிவரவிருக்கிறது.

மீ மிக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள் (Mi MIX Alpha Specifications) :

  • அளவு: 154.38x72.3x10.4 மிமீ
  • சேமிப்புத் திறன் (Storage): 512 ஜிபி
  • திரை (Display): 7.92” இன்ச் அங்குல வளையும் தன்மைகொண்ட ஒ-லெட் சூழ் தொடுதிரை (Flexible OLED Surround display)
  • காட்சித் தரம் (Display Quality): 2088x2250 பிக்சல் ரெசல்யூஷன் (Pixel Resolution)
  • வன்பொருள் (Hardware): குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 (Qualcomm Snapdragon 855)
  • பின்பக்க படக்கருவி (Primary Camera): மூன்று கேமரா | 108 எம்பி சாம்சங் ஹெச்.எம்.எக்.எஸ். சென்சார் எனப்படும் உணர்வி கொண்ட முதன்மைக் கேமரா (108MP Samsung HMX sensor) + 20 எம்.பி வைட் (20-megapixel wide-angle camera) + 12 எம்.பி போர்ட்ரேட் (12-megapixel portrait camera)
  • முன்பக்க படக்கருவி (Secondary Camera): இல்லை
  • இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ். / ஜி.என்.என்.எஸ். (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வைஃபை,
  • உணர்விகள் (Sensors): ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட், ப்ளூடூத் 5.0
  • அலைக்கற்றை: ஐந்தாம் தலைமுறை (5G)
  • இயங்குதளம் (Operating System): எம்.ஐ.யு.ஐ. ஆல்ஃபா ஆப்பரேட்டிங் சிஸ்டம் (MIUI Alpha operating system)
  • மின்கலத் திறன் (Battery): 4,050 எம்.ஏ.எச்.
  • சார்ஜ்: 40W விரைவு மின்னூக்கத் திறன் (Fast Charging)
  • விலை: ரூ.1,90,000 (எதிர்ப்பார்க்கப்படுகிறது)
  • எடை: 241 கிராம்

'செல்ஃபி'க்குள் புது நுட்பம் புகுத்திய ஆப்பிள்... 'ஸ்லோஃபி' அறிமுகம்..!

Intro:Body:

Mi MIX 3 pushes the limits of Full Screen Display

Conclusion:
Last Updated : Oct 3, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.