மும்பை: தொலைத் தொடர்பு பயன்பாடு குறித்த ஆய்வில் 30 விழுக்காடு அளவுக்கு மக்கள் அனைவரும் இணைய பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது மக்களின் இணைய பயன்பாடு சராசரியாக 90 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்த பயன்பாட்டில் 30 விழுக்காடு அளவு உயர்ந்திருப்பதாகவும், மார்ச் 25ஆம் தேதி முதல் இதனை கணக்கிட்டுள்ளதாகவும் தகவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தாக்கம்: பணியாளர் தேர்வு, சம்பள உயர்வு, பதவி உயர்வு என அனைத்தும் நிறுத்திவைப்பு!
கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக இதுவரை இந்தியாவில் 601 பேர் மரணமடைந்துள்ளனர். 18 ஆயிரத்து 970 பேர் (தற்போது வரை) தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. மேலும் ஊரடங்கை நீட்டித்து மே 3ஆம் தேதி வரை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், தங்களின் கவனத்தை இணையத்தின் பக்கம் அதிகமாக செலுத்தி வருகின்றனர்.
ஊரடங்கை மீறுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - சிறப்புத் தொகுப்பு!
அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், கூகுள் நிறுவனத்தின் யூடியூப்பை மட்டும், மார்ச் 25 முதல் இதுவரையில் 30ஆயிரம் கோடி பேர் கண்டு களித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும், உணவு சமைப்பது குறித்து 52 விழுக்காடு பார்வையாளர்களும், விளையாட்டில் 23 விழுக்காடு பார்வையாளர்களும், தகவல்கள் குறித்து 42 விழுக்காடு பார்வையாளர்களும் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.