தென்கொரிய நிறுவனமான எல்ஜி சமீபத்தில் புதிய ஸ்மார்ட் போன்களை அடிக்கடி சந்தையில் அறிமுகப்படுத்திவருகின்றன. இச்சூழலில், எல்ஜி W11, W31, W31+ ஆகிய மூன்று கைப்பேசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று கைப்பேசிகளும் பயனர்களுக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எல்ஜி W11:
- இந்த ஸ்மார்ட் போன் 6.52இன்ச் அளவுடன், 20:9 ஹெச்டி முழு நீள பார்வை வசதியுடன் வந்துள்ளது.
- இதன் கேமராவும் 8 எம்பி திறன் கொண்டது.
- இதன் மின்கலம் (பேட்டரி) தன்மை 4ஆயிரம் எம்ஏஹெச் ஆகும்.
- ஆண்ட்ராய்டு 10 உடன் வரும் இந்த ஸ்மார்ட் போனில் 4ஜி லைட், 3ஜி, 2 ஜியை பயன்படுத்தலாம்.
- அதுமட்டுமின்றி 3 ஜிபி ரேம்புடன், 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் இந்த போனில் விலை ரூ.9ஆயிரத்து 490ஆகும்.
எல்ஜி W31 & W31+:
- இந்த ஸ்மார்ட்போன்கள் 6.52 இன்ச் அளவுடன், 20:9 ஹெச்டி முழு நீள பார்வை வசதியுடன் வந்துள்ளது.
- இதன் கேமராவும் 8 எம்பி திறன் கொண்டது.
- இந்த போன்களில் 13 எம்பி கம்ரஸிங்குடன், 5எம்பி சூப்பர் வொய்ட் வசதியுடன் உள்ளது.
- இதன் பேட்டரி தன்மை 4ஆயிரம் எம்ஏஹெச் ஆகும்.
- ஆண்ட்ராய்டு 10 OS உடன் களத்தில் இறங்கும் இந்த ஸ்மார்ட் போன்களின் விலை WW31 & W31+ முறையே ரூ.10,990 மற்றும் ரூ.11,990 ஆகும்.
இதையும் படிங்க... ’ஹூவாய் மேட் 40’ தொகுப்பு திறன்மிகு ஸ்மார்ட் கைபேசிகள் வெளியீடு!