லெனெவோ இசெட்6 ப்ரோ இணையம் மூலம் கிடைத்த தகவலின்படி இந்த திறன்பேசியில் 100 மெகாபிக்ஸல் கொண்ட அதிநவீன புகைப்படக் கருவி இருக்கும், மேலும் அதுவே இந்த திறன்பேசியின் மிக முக்கிய சிறப்பம்சம் ஆகும்.
இந்த புகைப்படக் கருவி, நிறைய புகைப்படங்களைச் சேர்த்து ஒரே ஒரு பிரேமாக பெரிய படத்தைத் தெளிவாகத் தருகிறது.
இது மட்டுமல்லாமல், லெனோவா இசட்6 ப்ரோவில் பயனர்களுக்கு பெரும் அனுபவத்தை வழங்கும் அம்சங்களில் ஹைப்பர் விஷன் உணர்கருவி (sensor) தொழில்நுட்பமும் உள்ளது.
இது நிறுவனத்தின் முதல் 5ஜி திறன்பேசியாக வெளிவர இருக்கிறது. முன்னதாக லெனோவா இசட்5 ப்ரோ ஜிடி யில் ஸ்னாப்ட்ராகன் 855 SoC, 12ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை எந்த நிறுவனமும் 100 மெகாபிக்ஸல் புகைப்படக் கருவியுடன் கைப்பேசியை அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.