ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 49 மில்லியன் யூனிட் ஏற்றுமதியை எட்டியுள்ளது. 10% பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகை காலத்திற்கான அனைத்து முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகளாலும் புதிய அறிமுகங்கள் மற்றும் தள்ளுபடிகள் என இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி மிக உயர்ந்த நிலையில் இருந்தது.
சியோமி தொடர்ந்து ஸ்மார்ட்ஃபோனில் (26 சதவீத) பங்குகளுடன் முன்னிலை வகிக்கிறது, சாம்சங் (20 சதவீதம்), விவோ (17 சதவீதம்), ரியல்மீ (16 சதவீதம்), ஒப்போ (8 சதவீதம்) உள்ளன.
ஒன் ப்ளஸ் மூன்றாம் காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன் பிராண்டாக உருவானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது, இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன் ப்ளஸ் 7 டி மற்றும் அதன் ஒன் ப்ளஸ் 7 தொடரில் தள்ளுபடி சலுகைகளால் இயக்கப்படுகிறது.
மேலும், ''தீபாவளி சீசனுக்கு முன்னதாக பழைய ஜியோபோன் சரக்குகளை அழிப்பதால், ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து புதிய ஏற்றுமதி மந்தநிலையின் காரணமாக, ஆண்டுக்கு சுமார் 37 சதவீதம் சரிவைக் கண்டது” என்று கவுண்டர் பாயிண்ட் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரூ.54.2 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை ஆடி A6!