ETV Bharat / lifestyle

விரைவில் வருகிறது ஐஃபோன் மடக்கு கைபேசிகள்! - புதிய ஐஃபோன்

உலகளவில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐஃபோன் கைபேசி வரிசையில் மடக்கும் திறன்கொண்ட கைபேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. க்ளாம்ஷெல் போலவும், புத்தகத்தை போலவும் இரண்டு ரகங்களை நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Foldable iPhone, Apple pencil, apple, apple latest news, apple foldable iphone, Foxconn factory in Shenzhen, who is making apple foldable iphone, features of apple foldable iphone, Equal Ocean, ஐஃபோன் மடக்கு கைபேசிகள், ஆப்பிள் பென்சில், technology news in tamil, latest tech news, apple latest updates, கேலக்ஸி Z ஃபிளிப், மோட்டோ ரேசர், புதிய ஐஃபோன், ஃபாஸ்கான்
Foldable iPhone
author img

By

Published : Feb 18, 2021, 2:35 PM IST

சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): ஆப்பிள் நிறுவனம், புதிய மடக்கும் திறன்கொண்ட ஐஃபோன் கைபேசிகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் ஆப்பிள் ஸ்டைலஸ் எனும் எழுத்தாணி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய 7.3 அல்லது 7.6 அளவு கொண்ட ஓ-லெட் திரை இதில் இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், ஐபேட் வரிசையில் புத்தக வடிவிலும் ஒரு டேப்லெட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்- பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் சிறப்பம்சங்கள்!

ஆப்பிளின் இந்த படைப்புகள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபிளிப், புதிய மோட்டோ ரேசர் ஆகிய ஸ்மார்ட் கைபேசிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய கைபேசி தயாரிப்பு பணிகள் சீனாவில் உள்ள ஃபாஸ்கான் தொழிற்சாலையில் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும், இந்த புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வரும்போது, ஐபேட் மினி டேப்லெட் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.