இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த மடலாக ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ல்மார்ட்போன்களை மார்ச் 12ஆம் தேதி டெல்லியில் வெளியிட்டது. இந்த இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, 12,999 ரூபாயில் தொடங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரெட்மி நோட் 9 ப்ரோ இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்தது. விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மார்ட்போன் 'Out of Stock' ஆனது.
இந்நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரோ வெறும் 90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக, ரெட்மி இந்தியா நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரெட்மி நோட் 9 ப்ர அடுத்ததாக வரும் மார்ச் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரெட்மி நோட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் எல்இடி டிஸ்பிலே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி
- பிராசஸர்48 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 5020mah பேட்டரி
- ஆண்டிராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்
விலை
- 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 12,999
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 15,999
-
Thank you everyone for a spectacular response to the first sale of the all-new #RedmiNote9Pro!
— Manu Kumar Jain (@manukumarjain) March 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Entire quantity went out of stock on @amazonIN within 90 secs. Thank you! 🙏
Rest assured that we are working hard, round the clock to serve you. Next sale on 24th March.#Xiaomi ❤️ pic.twitter.com/08pWvHWJ2K
">Thank you everyone for a spectacular response to the first sale of the all-new #RedmiNote9Pro!
— Manu Kumar Jain (@manukumarjain) March 17, 2020
Entire quantity went out of stock on @amazonIN within 90 secs. Thank you! 🙏
Rest assured that we are working hard, round the clock to serve you. Next sale on 24th March.#Xiaomi ❤️ pic.twitter.com/08pWvHWJ2KThank you everyone for a spectacular response to the first sale of the all-new #RedmiNote9Pro!
— Manu Kumar Jain (@manukumarjain) March 17, 2020
Entire quantity went out of stock on @amazonIN within 90 secs. Thank you! 🙏
Rest assured that we are working hard, round the clock to serve you. Next sale on 24th March.#Xiaomi ❤️ pic.twitter.com/08pWvHWJ2K
-
இதையும் படிங்க: ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரெட்மி நோட் 9 சீரிஸ்!