ETV Bharat / lifestyle

பட்ஜெட் விலையில் வெளியான ஒன்பிளஸின் புதிய ஸ்மார்ட்போன்! - ஒன்பிளஸ் நார்டு விற்பனை தேதி

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனும் ஒன்பிளஸின் ட்ரூ வயர்லெஸ் இயர்போனும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

OnePlus NOrd
OnePlus NOrd
author img

By

Published : Jul 23, 2020, 12:01 PM IST

பட்ஜெட் ஸ்மார்ட்போனாக தனது பயணத்தைத் தொடங்கி இன்று ப்ரீமியம் செக்மென்ட்டில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்பிளஸ்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. அப்போது முதலே ஒன்பிளஸின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மீதான ஆர்வம் அதன் ரசிகர்களிடையே அதிகமானது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு augmented reality நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

OnePlus NOrd
ஒன்பிளஸ் நார்டு அம்சங்கள்

ஒன்பிளஸ் நார்டு அம்சங்கள்

  • 6.44 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 865 ஜி பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 32 மெகாபிக்சல் + 32 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமராக்கள்
  • ஆண்டிராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
  • 4,115mah பேட்டரி
  • நிறங்கள் - நீலம், கருப்பு
    OnePlus NOrd
    ஒன்பிளஸ் நார்டு அம்சங்கள்

விலை

  • 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் - 24,999 ரூபாய்
  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 27,999 ரூபாய்
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 29,999 ரூபாய்
    OnePlus NOrd
    ஒன்பிளஸ் கேமரா வசதிகள்

8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வேரியன்ட் மாடல்கள் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அமேசான் தளத்திலும் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கென பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ள 6 ஜிபி ரேம் வேரியன்ட் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்த நிகழ்ச்சியில் ஒன்பிளஸின் ட்ரூ வயர்லெஸ் இயர்போனும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸின் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்

ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அம்சங்கள்

  • ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்
  • வெளிப்புற சத்தங்களை ரத்துசெய்ய environmental noise cancellation
  • வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பாடல்களை கேட்கும் Wrap charge வசதி
  • மேம்படுத்தப்பட்ட பேஸ் மற்றும் ஒலி அமைப்புகளுக்காக 13.4 ML dynamic drivers
  • IPX4 water resistance rating
    ட்ரூ வயர்லெஸ் இயர்போன்

இந்தியாவில் 4,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் வெள்ளை, கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்த இயர்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.