ETV Bharat / lifestyle

குற்றம் - 01: 'ஜூஸ் ஜேக்கிங்' மூலம் ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் - ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களை பொது இடங்களில் சார்ஜ் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த இலவச சார்ஜிங் வசதியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன்கள் ஹேக்  செய்யும் முறைதான் ஜூஸ் ஜேக்கிங்.

JUICE JACKING
JUICE JACKING
author img

By

Published : Jun 20, 2020, 12:01 PM IST

சைபர் குற்றங்கள் பல வகை, அதில் தற்போது 'ஜூஸ் ஜேக்கிங்' என்ற புதிய வகை ஹேக்கிங்கும் இணைந்துள்ளது. ஆனால், சிறிது காலத்தில் இந்த சைபர் தாக்குதலுக்கு பலர் பலியாகிவிட்டனர். இதிலிருந்து தப்பிக்க, விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

மொபைல்போனின் சார்ஜிங் கேபிள் வழியே எப்போது தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வசதி அறமுகப்படுத்தப்பட்டதோ, அப்போது முதல் இதே கேபிள்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட தரவுகளை ஹேக் செய்யும் ஜூஸ் ஜேக்கிங் முறையும் அதிகரித்துவிட்டது.

விமான, பேருந்து, ரயில் நிலையங்கள், மால்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலிருக்கும் இலவச சார்ஜிங் நிலையங்களையே இதுபோன்ற ஹேக்கர்கள் குறிவைப்பார்கள். அங்கிருக்கும் USB portகளில், முன்கூட்டியே வைரஸ்களைப் பதிவேற்றி வைத்திருப்பார்கள். அதை நாம் பயன்படுத்தும்போது வைரஸ்களை சார்ஜிங் கேபிள் வழியே ஸ்மார்ட்போனுக்குள் வந்துவிடும்.

இதன் மூலம் வங்கி பாஸ்வேர்டுகள், சமூக வலைத்தள பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி தனிப்பட்ட புகைப்படங்களும்கூட திருடப்படுகின்றன. ஒரு முறை உங்கள் ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்பட்டவுடன், அதன் பாஸ்வோர்டுகளை மாற்றி உங்கள் ஸ்மார்ட்போன்களை நீங்களே பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து உங்களை பிளாக்மெயில் செய்வார்கள்.

இந்தியாவின் ஐ.டி தலைநகராகக் கருதப்படும் பெங்களூவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துவருவதாக குற்றப் பிரிவுக்கான இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “நகரிலுள்ள சார்ஜிங் நிலையங்களில் உள்ளூர் காவலர்கள், சைபர் கிரைம் காவலர்களின் உதவியுடன் அவ்வப்போது சோதனைகளை செய்வோம்.

JUICE JACKING
ஜூஸ் ஜேக்கிங் என்றால் என்ன?

சார்ஜிங் நிலையங்களிலிருந்து இதுபோன்ற சைபர் குற்றத்தைச் செய்ய முடியும் என்பதை மக்கள் அறிந்தவுடன் அதிலிருந்து தப்பித்திக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும்” என்றார்.

மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் ஒன்றுதான் இந்த ஜூஸ் ஜாக்கிங். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்பதே இதைத் தடுக்க இருக்கும் ஒரே வழி!

இதையும் படிங்க: சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்தான், ஆனால் லேபிளில் சீனாவின் பெயர் இருக்காது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.