டெல்லி: இந்தியாவில் வெளியாகியுள்ள போக்கோ சி3 கைப்பேசி, பிளிப்கார்ட் தளத்தின் சலுகை விலை விற்பனை நாளான ‘பிக் பில்லியன் டே’ அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
போக்கோ சி3, 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு ரகத்தின் விலை ரூ.7,499 ஆகவும், 4ஜிபி ரேம் + 64 ஜிமி சேமிப்பு ரகத்தின் விலை ரூ. 8,999 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட படக்கருவிகள், 50002mAh மின்கலத்திறன் எனச் சிறப்பம்சங்களை இந்த கைப்பேசி கொண்டுள்ளது.
போக்கோ சி3 சிறப்பம்சங்கள்:
- 6.53 அங்குல எச்டி பிளஸ் தொடுதிரை
- 720 x 1600 பிக்சல் தீர்மானம் | 20:9 என்ற திரைவிகிதம்
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் MIUI 12 வசதி
- 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- கூடுதலாக சேமிப்பு நீட்டிப்பு வசதி
- 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று பின்பக்க படக்கருவி
- 5எம்பி சுமயி படக்கருவி
- 5000mAh மின்கல திறன்
- 10வாட் அதிவிரைவு மின்னூக்க திறன்
- வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, ஜிபிஎஸ்
- டூயல் 4 ஜி VoLTE, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, ஜிபிஎஸ் +க்ளோனாஸ்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்