ETV Bharat / lifestyle

கரோனா காலத்தில் வெளியான ஒன்பிளஸ் மொபைல்! எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா? - ஒன்பிளஸ்

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளும் நெருக்கடியைச் சந்தித்துவரும் இந்தச் சூழலில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

OnePlus 8
OnePlus 8
author img

By

Published : Apr 15, 2020, 7:03 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றன.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் முடங்கியுள்ளன. பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் புதிய தயாரிப்புகளின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளன. இருப்பினும், பிரபல சீன நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை துணிச்சலாக வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

  • 6.55 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • பின்புறம் 48மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
  • ஆண்டிராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
  • 4,300mah பேட்டரி
  • நிறங்கள் - கறுப்பு, வெள்ளை, பச்சை

விலை

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 53,200 ரூபாய்)
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 799 டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 60,800 ரூபாய்)
    OnePlus 8
    ஒன்பிளஸ் 8

ஒன்பிளஸ் 8 ப்ரோ அம்சங்கள்

  • 6.78 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 48 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா

  • 4,510mah பேட்டரி
  • நிறங்கள் - கறுப்பு, நீலம், பச்சை

விலை

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 899 டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 68,000 ரூபாய்)
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 999 டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 76,000 ரூபாய்)
    OnePlus 8
    ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஸ்மாட்ர்போனுக்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்தும், பிரிட்டனில் ஏப்ரல் 21ஆம் தேதி இருந்தும் விற்பனைக்கு வரவுள்ளது. இருப்பினும் இவை இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்தும் இந்தியாவில் இதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் இதுவரை எந்தவொரு அதிகார்பூர்வ தகவலும் ஒன்பிளஸ் சார்பில் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: கோவிட்-19 இந்தியாவில் அதிகரிக்கும் இணைய பயன்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.