ETV Bharat / lifestyle

பிளேஸ்டேஷன் 3 சாதனத்தை நிறுத்தப்போகிறதா சோனி - அதிர்ச்சியில் கேமர்ஸ் - சோனி நிறுவனம்

சான் பிரான்ஸ்சிகோ: உலகளவில் 80 மில்லியனுக்கும் (எட்டு கோடி) அதிகமான யூனிட்கள் விற்பனையான பிளேஸ்டேஷன் 3 சாதனத்தின் வெளியீட்டை நிறுத்த சோனி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ps3
பிளேஸ்டேஷன் 3
author img

By

Published : Mar 30, 2021, 5:16 PM IST

பிரபல கேமிங் சாதனமான பிளேஸ்டேஷன் 3 வெளியீட்டை வரும் ஜூலை 2ஆம் தேதி நிறுத்திடச் சோனி நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுமட்டுமின்றி, வீடியோ கேமிங் கன்சோலான விட்டாவின் விநியோகத்தையும் ஆகஸ்ட் 27ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோனியின் பிளேஸ்டேஷன் 3 2006 நவம்பரில் வெளியானது. சுமார் எட்டு கோடி யூனிட்கள் இதுவரை விற்பனையாகியுள்ளன. விட்டா சாதனம் 10 கோடி யூனிட்கள் வரை விற்பனையாகியுள்ளன.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளேஸ்டேஷன் 3 சாதனத்தின் வெளியீடுதான் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, சாதனத்தை வைத்துள்ள பயனாளர்கள், பிளேஸ்டோரில் எப்போதும்போல கேம்ஸ்களை பதிவிறக்கம் செய்து உபயோகித்துக் கொள்ளலாம். பிளேஸ்டேஷன் பிளஸ் வவுச்சர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, பிளேஸ்டேஷன் 5 சாதனம் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் புரோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.