டெல்லி : பப்ஜி நியூ ஸ்டேட் இந்தியா உள்பட 200 நாடுகளில் நவம்பர் 11ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை அந்நிறுவனத்தின் வெளியீட்டாளர் கிராஃப்டன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் சோதனை நிகழ்ச்சி 28 நாடுகளில் அக். 29-30 வரை நடத்தப்படும். இதைத்தொடர்ந்து புதிய மொபைல் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்படும் என்று தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட பப்ஜி Android மற்றும் iOS இல் 50 மில்லியனுக்கும் அதிகமான முன் பதிவுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிராஃப்டன், “யூடியூபில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட அதன் நிகழ்வில் பப்ஜி நியூ ஸ்டேட் உலகளவில் 17 வெவ்வேறு மொழிகளில் இலவசமாக விளையாடக்கூடிய மொபைல் கேமாக அறிமுகமாகும்” என்றார்.
பக்ரைன், கம்போடியா, எகிப்து, ஹாங்காங், இந்தோனேசியா, ஈராக், ஜப்பான், ஜோர்டான், கொரியா, குவைத், லாவோஸ், லெபனான், மக்காவோ, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 28 நாடுகளில் பப்ஜியின் இறுதி தொழில்நுட்ப சோதனை அடுத்த வாரம் நடத்தப்பட உள்ளது.
பப்ஜி நியூ ஸ்டேட்டில் ஏமாற்றுக்காரர்களை கண்டறியும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Battlegrounds Mobile India: முகத்தில் மரு வைத்து வரும் பப்ஜி!